அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனுடைய மாபெரும் கிருபையை கொண்டு நமதூரில் ஹஜ் பெருநாள் தொழுகை 27 /10 /2012 அன்று காலை சரியாக 7:15 க்கு ஆரம்பிக்கப்பட்டது. TNTJ கிளை சார்பில் பண்ணைய தெருவில் மைதானத்தில் (திடலில்) நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது. மழைக்காலம் என்பதால்
மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பன்ணையத்தெரு திடலை நோக்கி தமது வீடுகளிலிருந்து 6:00 மணிக்கே புறப்பட்டனர். அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் தொழுகைக்கு முன்பாக மழையும் நின்றது. TNTJ ஜமாத் நிர்வாகிகளும் மாற்று ஏற்ப்பாட்டுக்கும் யோசித்த போது மழை நின்றதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவறாக குறிப்பிட்ட நேரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையை ஆரம்பித்தனர். இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு

திருவாரூர் மாவட்ட தாயி மரக்கடை பாட்சா அவர்கள் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். இந்த ஹஜ் பெருநாள் உரை வருகைதந்தவர்களுக்கு புதிய உற்ச்சாகத்தை தந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு & ஆதிரங்கம் சகோதரர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் . (அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment