காரணத்தை அறிந்து கொள்ள இந்த செய்தியை முழுமையாக படியுங்கள். கட்டிமேடு நூலகத்தை சேர்ந்த சில சகோதரர்களின் சலபி கொள்கை சம்மந்தமாக அவர்களுடைய தவறுகளை நோட்டீஸாக கட்டிமேட்டில் TNTJ வினர் வெளியிட்டு எந்த அளவுக்கு அவர்கள் மார்கத்துக்கு முரனாக இருக்கிறார்கள் என்று தெள்ள தெளிவாக நோட்டீஸில் சுட்டிகாட்டி இருந்தோம். அதற்கு அவர்கள் இன்றுவரை கட்டிமேட்டு மக்களிடம் மறுப்பு வெளியிட்டு தங்கள் நிலையை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க முடியவில்லை. அதைப்போல 18/5/2013 அன்று பொதுக்கூட்டம் நடத்தபோகிறோம் என்று ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிப்பு செய்து சலபி கொள்கை சேர்ந்த அந்த குறிப்பிட்ட ஜிப்பா போட்டு கொண்டு கட்டிமேட்டில் அலையும் சகோதரர்களிடம் கால அவகாசம் நிறையாக உள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் அன்று நேரடியாக கேள்வி கேட்க வாருங்கள் என்றோம். அதற்கும் செவி சாய்கவில்லை. மேடையிலேயே மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் எனது உரைக்கு பிறகு கேள்வி கேட்க வாருங்கள் என்று அழைத்தார் அப்போதும் வரவில்லை. ஆனால் 2/11/2013 அன்று காலையில் திடுதிப்பு என்று அவசர கோலத்தில் கட்டிமேட்டை சேர்ந்த மதிப்புக்குறிய பெரியவர் சகோ: பீர் முஹம்மது மகன் அப்பாஸ் என்பவர் எங்களுடைய முக்கியமான பிரமுகர் கட்டிமேட்டுக்கு 1 மணிநேரத்தில் வருகிறார். நீங்கள் (TNTJ வினராகிய) உடனே வந்து கேள்வி கேளுங்கள் தெளிவு பெருங்கள் என்று கிளை தலைவர் சேக் அப்துல்லா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அதற்கு அவர் சிறிய கால அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். திடீர் என்று அழைக்கிறீர்களே இன்று சொந்த வேலைகள் நிறைய உள்ளது. வேறு ஒரு நாள் வைத்து கொள்ளுங்கள் என்று TNTJ வினர் கூறினார்கள். அதற்கு வழிகெட்ட சலபி கொல்கையை சேர்ந்தவர்கள் அதெல்லாம் முடியாது வேறு ஒரு நாளில் வைப்பதாக இருந்தால் பாண்டிச்சேரியில் இருந்து அவர்களை வரவளைக்க ரூ 10,000 முதல் ரூ 15,௦௦௦ வரை செலவாகும் அதை நீங்கள் தருகிறீர்களா ? என்றார் அதற்கும் TNTJ வினர் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் மக்கள் தெளிவடைய வேண்டும் என்பதற்காக அந்த செலவை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம் வேறு ஒரு நாளில் கேள்வி கேட்கிறோம் என்று கூறினார்கள். இரண்டு பேருக்கும் வசதிபட்ட நாளில் ஏற்பாடு செய்யவேன்டியது தானே அந்த வழிகெட்ட சலபி கொல்கையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் தயாராக இல்லை. இதன் மூலம் தவ்ஹீத் ஜமாத்தினரை பார்த்து சிங்கத்தை கண்டு ஓடும் ஓநாய் போல ஓடுகிறார்கள். பல சொந்த வேலைகளுக்கு இடையில் அல்லாஹ்வுடைய தவ்ஹீத் என்னும் சத்திய கொல்கைக்காக தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு கிளை தலைவர் தலைமையில் செல்கிறார் அவர்களுடைய சபைக்கு சென்று தாங்கள் யார் என்று அறிமுகம் செய்து கொண்டு (TNTJ வினர் என்று) கேள்வி கேட்க வந்துள்ளோம் என்று கூரியவுடன் அந்த முக்கிய பிரமுகர் இப்போது Class நடைபெறுகிறது என்றார். அதற்கு TNTJ வினர் எங்களை இப்போது கேள்வி நேரம்தான் என்று அழைத்தார்கள் என்று கூறி கட்டிமேட்டில் வெளியிட்ட (நோட்டீசை காண்பித்து) இந்த "வழிகெட்ட சலபி கொள்கை" என்ற ஆதாரபூர்வமாக தூய இஸ்லாமிய அடிப்படையில் சுட்டி காட்டிய நோட்டீஸ்சுக்கு பதில் எழுதி கொடுங்கள் என்று கொடுத்தபோது அதற்கு அந்த முக்கிய பிரமுகர் உண்மையாளராக இருந்தால், கொல்கையில் உருதிமிக்கவராக இருந்தால் பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் மழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த கேள்விதான் தெரியுமே என்று கூறி, எழுதி எல்லாம் கொடுக்க முடியாது ஆடியோ வடிவில் தருகிறோம் என்றார். சலபி கொல்கைதான் உன்மையானதாக இருந்தால் நாம் நோட்டீசில் கூறிய குற்றசாட்டுகளுக்கு பதில் கூறி இருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி கூறவிரும்பவில்லை. உடனே TNTJ வினர் பராவில்லை.எப்படியாயினும் எங்களுக்கு பதில் கிடைத்தால் போதும் என்று சபையிலிருந்து விடைபெற்றனர். ஆனால் ஒருவாரத்திற்கு பிறகு கட்டிமேட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவர் ஆடியோவை கொடுத்தார். அந்த ஆடியோவை TNTJ வினர் கேட்ட போது அதில் நாம் வெளியிட்ட நோட்டீசில் உள்ள கேள்விளுக்கு ஒரு வார்த்தை கூட பதில் இல்லை. அவருடைய பேச்சு எப்படி உள்ளது என்றால் நாம் மத்ஹபுகளை பின்பற்ற கூடியவர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் அறிவு கெட்டவர்களாக எப்படி செயல்படுவார்களோ (ஆணி மடம் என்றால் நோனி மடம் என்பார்களே) அதுபோல நாம் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் PJ என்ற தனிநபரை தரை குறைவாகவும், கேவலமாகவும் பேசி அதன் மூலம் பப்ளிசிட்டி கிடைப்பதுதான் நோக்கமாக கொண்டுள்ளார். அவர் ஒரு காபிர் என்று பத்வா கொடுத்துள்ளோம் என்று கூறி உள்ளார். அந்த முக்கிய பிரமுகர். மேலும் சஹாபாக்களை TNTJ வினர் திட்டுவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் அபாண்டமாக கூறிவுள்ளார். தங்கள் சலபி கொல்கை மீது கூறிய குற்றசாட்டுகளுக்கு ஒரு வார்த்தை கூட விளக்கம் கொடுக்காமல் அதை விடுத்து வேறு ஒரு தனிநபரை சாடுகிறார். இதன் மூலம் இவர்கள் பொய்யர்கள்தான் என்று உருதியாகிறது. இவர்களின் முகத்திரையை இன்ஷாஅல்லாஹ் விரைவில் கிழிப்போம் இவர்களுடைய கொள்கை வழிகெட்ட கொள்கை என்று அல்லாஹ்வுயை உதவியால் கட்டிமேட்டில் நிரூபணமாகிறது. இவர்களுடைய சொல்லும், செயலும் தர்கவாதிகளுக்கு துணை போகிறவர்கலாகதான் அமைந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து இவர்களுடைய முகத்திரை இன்ஷாஅல்லாஹ் கிழிப்போம். அறியாமையில் இதில் இருக்கும் நம் ஒவ்வொறு சகோதரர்களை இன்ஷா அல்லாஹ் மீட்டெடுப்போம்.கட்டிமேடு இஸ்லாமிய நூலகத்தை ஆரம்பிகும்போதே தவ்ஹீதை பிரச்சாரம் செய்யப்போகிறோம் என்று அதில் உள்ள சகோதரர்கள் கூறி அதற்கு களமாகதான் அதை அமைத்தனர். ஆனால் இன்று அது நிர்வாக திரன்மையின்மை காரணத்தால் சீரழிகிறது. அது தவ்ஹீத்துக்கு எதிரான களமாக மாறியுள்ளது. .இன்ஷா அல்லாஹ் வழிகெட்ட சலபிகளை பற்றிய கேள்விக்கனைகள் தொடர்ந்து வரும்
குறிப்பு :- பொதுக்கூட்டம் வீடியோ link :http://www.hominin.com/video/
No comments:
Post a Comment