இறைவனின் திருப்பெயரால்...
"விபச்சாரத்திற்க்கு நெருங்காதீர்! அது வெட்க கேடானதாகவும் தீய
வழியாகவும் இருக்கிறது"
(அல் குர்ஆன் 17:32)
அல்லாஹ் தன் திருமறையில் விபச்சாரம் செய்யாதீர்கள் என்று மட்டும்
கூறாமல் அதன் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறுகிறான். இதில்தான் நம்
சமுதாயம் கவனக்குறைவாக செயல்படுகின்றது. விபச்சாரம் யாரிடமும்
திடீரென ஏற்படும் பழக்கமல்ல. ஒழுக்கமுள்ளவர்களாகவும், இறைநம்பிக்கை
உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கொடிய
வியாதி அவர்களை சென்றடையும். காரணம் நாம் எவ்வளவு ஒழுக்க
சீலர்களானாலும் நம்மை சுற்றிப் பிண்ணப்பட்டுள்ள இன்றைய நவீன வசதி
வாய்ப்புகளும் மார்க்க அறிவில் நம் சமுதாயம் பின்தங்கி இருப்பதாலும்
இக்கொடிய செயலில் நம் சமுதாயம் சிக்கிக்கொள்கிறது.
* "விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன்
அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட
விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு
செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை
கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது
பொய்யாக்குகிறது"* இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி: 6243
நேரம் பொன் போன்றது என்பது பழமொழி ஆனால் பொன்(Gold) விலை மதிப்புள்ளது
நேரமோ விலை மதிப்பில்லாதது. அந்த பொன்னான நேரத்தை
தொலைக்காட்சியிலும், டிவி, சீரியல்கள்,இசை நிகழ்ச்சிகள்,சினிமா பார்ப்பது
போன்ற இன்னும் பல வீணான விசயங்களிலும் கழிக்கின்றோம் இந்த கேடுகெட்ட
அனைத்தும்தான் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக நரகதின் பக்கம் இழுத்துச்
செல்கிறது நம் வீட்டு மக்களுக்கு காதல் என்ற விபச்சாரத்தின் மறு
பெயர் என்ன வென்று கூட தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று திருமணம் ஆகாத,
திருமணம் ஆன பல குழந்தைகளுக்கு தயான பின்பும் இந்த கேடுகெட்ட செயல்
நம்மிடையே தலை விரித்தாடுகிறது நன்னடத்தை, நேர்மை நபிகளாரின் தூய
வழிக்காட்டல் மூலம் காட்டுத் தீயாய் பரவிய நம் மார்க்கம் இன்று மாற்று
மத சகோதரர்களால் நகைப்புக்கும்,கேலிக்கும் ஆளாகிவிட்டது நம்
துரதிஷ்டமே!
திருமணம் ஆனவர்கள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டால் அது மரண
தண்டணைக்கு உரிய செயலாகும் ஆனால் நாம் வாழும் இந்த நாட்டில் இஸ்லாமிய
குற்றவியல் சட்டப்படி தண்டணை இல்லை என்ற காரணத்தினால் நாம் அதனுடைய
விபரீதம் அறியாமல் செயல்படுகிறோம். ஆனால் படைத்தவன் முன் மறுமையிலே
அரசனானாலும், ஆண்டியானாலும் ஒரு அணுவைக்கூட நகர்த்த சக்தி
பெறமாட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் நாம் செய்கின்ற
இந்த கேடுக்கெட்ட செயலுக்கு இங்கு தண்டனை கிடைக்கவில்லை என்றால்
மறுமையில் நம் நிலைமையை நினைத்து பாருங்கள் !
நாம் வாழும் இவ்வுலகில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஒரு வழிமுறையை
மீறினால் குறிப்பிட்ட தண்டனை கிடைக்கும்மென்று தெரிந்த பிறகு அதிலிருந்து
நாம் தூர விலகிவிடுகிறோம். அனால் அல்லாஹ் தன் திருமறையில் கடுமையான
எச்சரிக்கை செய்த ஒரு செயலை நம் சமுதாயம் சர்வசாதாரணமாக செய்கிறது
என்றால் நாம் இந்த கொடிய செயலுக்கு சவப்பெட்டி அடிப்பதற்கான எந்த
முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்றுதான் பொருள். *இது போன்ற ஒரு
கேடுக்கெட்ட செயல் குறித்த செய்தி நம்மிடம் வரும்போது அதைப்பற்றி
கடுகளவு கூட கவலையோ, வெட்கமோ வராமல் அதைப்பற்றி முழுமையாக
தெரிந்துகொள்வதற்க்கும்,அந்த செய்தியை நம்மால் முடிந்தவரை
பரப்புவதிலும்தான் முக்கிய கவனம் செலுத்துகிறோம்.* இந்த அசிங்கம் நம்
வீட்டிற்க்கு வர வெகுதூரமில்லை என்ற எதார்த்தம் தெரியாமல் இருக்கிறோம்.
*என் அருமை சமுதாயமே!*
நம்மை சுற்றியிருக்கும் தீய செயல்களை களைந்து எறிய வேண்டுமென்ற
முயற்ச்சியை மேற்கொண்டோம் என்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் அதில் வெற்றி பெற
நிச்சியம் உதவுவான். இந்த தீய செயல்களிலிருந்து நம் சமுதாயத்தை காக்க
வேண்டுமென்றால் அதற்க்கு நமதூரில் உள்ள ஜமாத்தார் அனைவர்களும்
ஒன்றுப்பட்டோ அல்லது தனித்தனியாகவோ ஓர் தீர்வு காண முன் வரவேண்டும்.
இதற்கு தீர்வு நம் சமுதாய மக்களுக்கு இறையச்சத்தையும் மறுமையில்
கிடைக்கப்போகும் தண்டனையின் வேதனையையும் எடுத்துரைப்பதைத் தவிர வேறு
வழியில்லை.இந்த விபச்சார அசிங்கத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்
என மார்தட்ட கூடிய ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் உண்டு. நன்மையை ஏவி தீமையை
தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
*தீர்வுகள்:*
ஒவ்வொரு தெருவிலுள்ள பெண்களை மாத அமர்வுகளாக ஒன்று திரட்டி நம்
சமுதாத்தில் நிலவுகின்ற அனைத்து சீர் கேடுகளையும் களைய அறிவுரைகளை
எடுத்துறைக்க வேண்டும்.
மார்க்கப் பட்டங்களை பெற்ற நம் பகுதியில் உள்ள ஆலிமா பெண்கள்
தங்களது திருமண பத்திரிக்கைளில் மட்டும் போட்டுக் கொள்வதோடு நிறுத்தி
கொள்ளாமல் தாங்கள் பெற்ற அந்த மார்க்க கல்வியை தங்கள் சகோதரிகளான
நம் சமுதாய பெண்களுக்கு குர்ஆனையும், ஹதீஸ்களையும் எடுத்து கூறி
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும்.
*"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள்
பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர்
தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன்
குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும்
கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள்
தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன்
முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி
விசாரிக்கப் படுவான்."* அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல்: புஹாரி: 893
நமதூரில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்மா பயான்களில்
விபச்சாரத்தின் விபரீதங்களை அச்சமூட்டி எச்சரிக்க வேண்டும்.
அறிமுகமான நம் சொந்த பந்தங்கள் முன்பு வர வெட்கப்படும் நம்
சமுதாய பெண்கள் அன்னிய ஆடவரோ, மாற்றுமத சகோதரர்கள் முன்போ
வருவதற்கு வெட்கப்படுவதில்லை. ஆண்கள் வீட்டில் இல்லாத சமயங்களில்
அறிமுகமானவரானாலும் வேறு எவரானாலும் வீட்டினுல்லே அனுமதிக்க கூடாது
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் அக்குடும்பத்திலுள்ள
ஆண்கள்தான் பொறுப்பு. அந்த வகையில் நம் குடும்ப பெண்களுக்கு அத்தியாவாசிய
தேவைகளை தவிர செல்போன் வைத்திருக்க அனுமதிக்க கூடாது. அதிலும் குறிப்பாக
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடத்தில் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள்
தவிர்க்க வேண்டும். அத்தியாவாசிய தேவைக்காக செல்போன் வைத்திருந்தால்
தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணத்திற்க்காக வெளியூர் செல்லும் சகோதரிகள்
தகுந்த ஆண் துனையில்லாமல் கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் பயனிப்பதை
அனுமத்திக்கூடாது.
மாணவ, மாணவிகளுக்கு இணையதள வசதிகளை செய்து கொடுத்திருக்கும்
பெற்றோர். தங்களது பிள்ளைகள் கம்பியூட்டர் இணைய தளத்தை
பயன்படுத்துவதை கவனமாக கண்காணிக்க வேண்டும். எக்காரணத்தைக்
கொண்டும் போட்டோ, போன் நம்பர், முகவரி போன்றவற்றை இணையதளத்தில்
பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
*"தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப்
பேணிக்காத்துக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெறிபவை தவிர மற்றவற்றை
வெளிப்படுத்த வேண்டாம்" *(அல் குர்ஆன் 24:31)
*பெண்கள் சுவர்கம் செல்ல இலகுவான வழி*
*"முஸ்லிமான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;
கட்டுப்படும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
அடக்கமாக இருக்கும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும்,
பெண்களும்; தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்,
பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் - ஆகியோருக்கு
அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்"* (அல்
குர்ஆன் 33:35)
மேற்கூறிய திருமறை வசனத்தில் நம்மை படைத்த இறைவன் நாம்
சுவர்க்கம் என்னும் மதிப்பிட முடியாத பரிசினை மிக இலகுவாக
அடைவதற்க்கு வழி காட்டுகிறான். அன்று நம் சமுதாயத்தில் சிறுவயதிலேயே
பெண்ணுக்கு மணம் முடித்தார்கள். தாங்களே சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே
பெண்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து. அவர்களை ஒழுக்கமான முறையில் வளர்த்து
திருமணமும் செய்து வைத்த வரலாற்றிர்க்கு சொந்தகரர்களாகிய நாம். இன்று
பெண் பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைத்து அழகு பார்க்கும் அதே நேரத்தில்
இறையச்சத்தை ஊட்டி வளர்த்தோமா என்றால் நிச்சியமாக இல்லை என்பதுதான்
உண்மை.
இறையச்சத்தை அதிகமதிகம் போதிப்பதால் மட்டும்தான் இம்மையிலும்
மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் பெண்களுக்கு நிறைய உரிமைகள் அளித்திருப்பதை நம் சமுதாயம்
தவறாக புரிந்து வைத்துள்ளார்கள்.பெண்களின் உரிமையில் எந்த மார்க்கமும்
சொல்லாத அளவிற்கு இஸ்லாம் தாராளமாக்கியுள்ளது. அதே நேரத்தில்
பாவத்திற்க்கு தண்டனை என்றால் அல்லாஹ்வை போல் தண்டிப்பவன் எவருமில்லை
என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
நபி (ஸல்) கூறினார்கள் "*எனக்கு சுவர்கம்,நரகம் எடுத்து
காட்டப்பட்டது. நரகத்தில் அதிகம் பெண்கள் இருப்பதை நான்
காண்டேன்"*என்று கூறினார்கள். நம் சமுதாய பெண்கள் இதை அதிகமாக
சிந்திக்க
வேண்டும். மார்க்கத்தில் இல்லாத பல செயல்களை இறை வழிபாடு என்று
நினைத்துக்கொண்டு கடமையான வணக்கத்திற்கு மேலாக செயல்படுகின்றனர்
படைத்த இறைவன் மனிதர்களிலே ஒருவரை தூதராக தேர்ந்தெடுத்து அவனுடைய
மார்க்கத்தை நமக்கு தூய்மையான முறையில் வாழ்ந்தும். கற்றும் கொடுக்க
செய்திருக்கிறான். ஆனால் நாமோ சத்தியம் தெளிவாக இருந்தும் யார் மார்க்கம்
என்ற பெயரால் எதை சொன்னாலும் அது உண்மையா, சரியா, குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ
ஆதாரம் உள்ளதா என்று கூட ஆராயாமல் அவற்றை கடைப்பிடித்து நரகத்தை
நோக்கி விரைந்து செல்கிறோம்.
உலக கல்வி என்பது மிகவும் அவசியமானதுதான். அதே நேரத்தில் அந்த
கல்வியை கற்கும் முறை சரியா என்பதை ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத
ஒன்று அதை நாம் சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம். நாம் எவ்வளவுதான்
கண்டிப்பாகவும். கட்டுப்பாடோடும் இருந்தாலும் ஷைத்தான் நம் நாடி
நரம்புகளில்லெல்லாம் அமர்ந்து வழிகெடுக்கிறான் என்ற அல்லாஹ்வின் கூற்று
உண்மையாகும். ஆணும்,பெண்ணும் சேர்ந்து படிக்கும் ஆபத்தான விஷயம் நமதூரில்
நடபெற்று வருகிறது இதற்கு முதலில் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
உடனடி நடவடிக்கையாக குறைந்தபட்சம் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி
வகுப்புளாக பிரித்து நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்மாகவும் சுவர்கம் செல்வதும், நரகம் செல்வதும்
அவரவர்கள் செயல்பாடுகளில்தான் உள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களும்
அவர்களது பிள்ளைகளின் வளர்ப்பு பற்றி மறுமையில் கேள்வி
கேட்கப்படுவார்கள். எனவே நாமும் நமது பிள்ளைகளும் அல்லாஹ்வின்
பொருத்தத்தை பெற்று நரகம் என்னும் கொடிய நெருப்பிலிருந்து தப்பித்து
எந்த கண்ணும் கண்டிராத எந்த செவியும் கேட்டிராத எவர் கற்பனைகளுக்கும்
எட்டிராத அந்த சுவர்க்க சோலையில் நுழைய வழிவகுக்க வேண்டும்.
*முஸ்லிம் சமுதாயமே!*
இந்த விஷயத்தை இத்தோடு மறந்து விடாமல் விபச்சாரம் என்னும் இந்த
பாவச் செயலை தடுக்க நினைக்கும் ஆண்களும், பெண்களும், இமாம்கள்,
நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக சேவை அமைப்புகள் என அனைத்து
தரப்பினரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வர
வேண்டும்.
ஒரு சிலர் செய்யும் இந்த இழிசெயலால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்
தலைகுனிவை ஏற்படுத்துகிறது இந்த இழி செயலை தடுக்கும் நடவடிக்கைகளில்
யாரும் எந்த யோசனைகள் தோன்றினாலும் அதை உடனடியாக நடைமுறைபடுத்த
முன்வர வேண்டும் அதிலும் குறிப்பாக குடும்பத்தினரை பிரிந்து
வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்கள் இந்த அவலத்திற்கு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
சுவர்க்கத்தில் சிறந்த தரஜாவை அடைவதற்கு ஆண்கள் ஜிஹாத் போன்ற
அறப்போர் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. பெண்கள் சுவனம் செல்ல மிக
இலகுவான வழியையே இஸ்லாம் கூருகிறது. தனது கற்பை காத்து கணவனுக்கு
நேர்மையாக நடக்கும் பெண்களுக்கு சுவர்கம் செல்வது
உறுதியாக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட அனைத்தும் விஷயத்தின் சாரம்சம் இஸ்லாம் மார்க்கத்தில்
எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கிகாரத்தை மட்டுமே
பின்பற்றினாலேயே இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறமுடியும் நாம் வாழும்
இந்த உலகம் ஒரு சோதனைக்கூடம்தான் இதில் வெற்றி தோல்வி நம் கையில்தான் உள்ளது.
இவ்வுலக நடைமுறையில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது பலமுறை விசாரித்து
அது சரிதானா என்று ஊர்ஜிதம் செய்த பிறகு தான் செய்கிறோம். ஆனால் மார்க்க
விஷயம் என்று வந்தால் அரபி பாஷை சரளமாக பேச தெரிந்து (பச்சை
தலைப்பாகையோடு) பெரிய தாடி வைத்திருந்தால் போதும் அவர் பாதளக்குழியில்
விழுந்தால் சுவர்கம் செல்வோம் என்று சொன்னால் மறுபரிசீலனை எதுவும்
செய்யாமல் கூட்டமாக விழுவதை காண்கிறோம்.
இந்த பிரசுரம் வெளியிட ஒரே காரணம் நம்மோடு நட்போடும் உறவோடும் ஒட்டி
உறவாடும் நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நரகம் எனும் கொடிய
நெருப்பில் விழுவதை தடுப்பதை தவிர வேரில்லை. யாரையும் தனிப்பட்ட
முறையில் புண்படுத்துவதற்கு அல்ல என்பதை அல்லாஹ் மீது அணையிட்டு கூறிக்
கொள்கிறோம். சிராத்துன் முஸ்தகீன் என்ற நேர்வழியை பின்பற்றி நாம்
எல்லோருக்கும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்
புர்வானாக! ஆமின்!!
* "அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன்
தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது
ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும்,
ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
அவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும்
வேதனையைச் தாயரித்துள்ளோம்.* (அல் குர்ஆன் 4:150)
No comments:
Post a Comment