திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். பிப் 14 அன்று TNTJ மாநில தலைமை இந்திய முஸ்லிம்களின் ஜீவதார கோரிக்கையான மத்தியிலும், மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வாழ்வுரிமை போரட்டத்தை அறிவித்து அதனை நமதூர் ஜமாத்துக்கும் கிளையின் சார்பாக தெரிவித்தோம். மேலும் கொள்கை ரீதியாக நமக்குள் சில கருத்து வேருபாடுகள் இருந்தாலும் அனைவரும் கலந்து கொள்வதால் ஏற்படும் சமுதாய நன்மையையும் எடுத்து கூறப்பட்டது. வருவதாக ஜமாத்தினர் தெரிவித்தனர். அதன்படி திருவாரூக்கு கட்டிமேடு-ஆதிரெங்க முஸ்லிம் ஜமாத் மன்ற தலைவர் ஜனாப் முனாப்பும் பொருப்பாளர்களும் தனியாக காரில் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிளையின் சார்பாக 6 வேன்களில் நமதூர் மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹமதுலில்லாஹ்...
No comments:
Post a Comment