மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் 2


🌏கியாமத் நாளின் அடையாளங்கள்
தொடர் 2🌏

முஸ்லிம்கள் ஆறு விஷயங்களை கட்டாயம் நம்ப வேண்டும்.

1. அல்லாஹ்வை நம்ப வேண்டும்.

2. வானவர்களை நம்ப வேண்டும்.

3. வேதங்களை நம்ப வேண்டும்.

4. தூதர்களை நம்ப வேண்டும்.

5. இறுதி நாளை நம்ப வேண்டும்.

6. விதியை நம்ப வேண்டும்.

'இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்'' என்பது அந்த ஆறு விஷயங்களில் ஒன்றாகும்.

மேற்கண்டவாறு நம்புவது தான் இறுதி நாளை நம்புதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.

இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேராகத் திகழ்கிறது.

இப்படி ஒரு நியாயத் தீர்ப்பு நாள் தேவை தான் என்று ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வும் ஒப்புக் கொள்கிறது.

இவ்வுலகில் ஒருவன் மிகவும் நல்லவனாக வாழ்கிறான். ஆனாலும் அவன் மிகவும் சிரமப்படுகிறான். அவன் செய்த நன்மைகளுக்கான பரிசு இவ்வுலகில் அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் பரவலாகக் காண்கிறோம்.

அது போல் ஒரு மனிதன் அனைத்து தீமைகளிலும் மூழ்கிக் கிடக்கிறான். எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்கிறான். ஆனாலும் இவன் சொகுசாக வாழ்ந்து மரணித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இவன் செய்த தீமைகளுக்கான தண்டனையை இவ்வுலகில் இவன் அனுபவிக்கவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பத்து கொலை செய்த ஒருவன் மரண தண்டனை பெற்றால் கூட அது அவனது குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அல்ல. ஒரு உயிரைக் கொன்றதற்குப் பகரமாக அவனது உயிரை வாங்குகிறோம். ஆனால் மீதி ஒன்பது கொலைகள் செய்ததற்கு என்ன தண்டனை?அதற்கான தண்டனையை இவ்வுலகில் அவனுக்கு யாராலும் வழங்க முடியாது.

எனவே இது போன்றவர்கள் தமது செயலுக்கேற்ற தண்டனையை அல்லது பரிசை அடைய வேண்டுமானால் அது இவ்வுலகில் அறவே சாத்தியமற்றதாகி விடுகிறது.

இதன் காரணமாக தீயவர்களைப் பார்த்து மற்றவர்களும் தம் மைத் தீய செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

'யாரும் தன்னைப் பார்க்காத வகையில் குற்றம் செய்து விட முடியும்'' என்று குற்றம் செய்யும் மனிதன் நம்புகிறான். அப்படி யாராவது பார்த்து விட்டாலும் அவர்களைச் சரிக்கட்ட முடியும் எனவும் நினைக்கிறான். இதன் காரணமாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், மனிதன் நல்லவனாகவே வாழ வேண்டுமானால் நியாயத் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது என்று நம்புவது தான் அதற்கான ஒரே வழி.

அதைத் தான் இறுதி நாளை நம்புதல் என்று இஸ்லாம் குறிப்பிடு கிறது. அந்த நாளில் நமது செயல்களின் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் எச்சரிக்கை....... தொடரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment