மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள்🌏தொடர்5.


கியாமத் நாளின் அடையாளங்கள்🌏தொடர்5.......      
மறைத்து வைத்த மர்மம் என்ன?

அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.

மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான்.

நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும்,கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.

நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக் கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியமுடியும்.

அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூ கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!

(திருக்குர்ஆன் 20:15,16)

ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக வைத்திருக்கிறான்.

இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை.

அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டா லும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.

அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கி யுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

No comments:

Post a Comment