மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

நமதூரில் தாவா பனி மேற்கொள்ள உதவிடுவீர்

இறைவ‌னின் திருப்பெயரால்...

அன்பிற்குறிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாமியர்களாக பிறந்துவிட்ட நாம் அதனுடைய கொள்கை அதிகமனோர் தெரியாதவர்களாக உள்ளோம்.

இஸ்லாம் என்ற பெயரில் இனைவைப்பு, மூடநம்பிக்கை, அறியமைக்கால பழக்க வழக்கங்கள் நமதூர் மக்களிடம் குடிக்கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் நாம் நேர்வழி பெற்றுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.

நாம் அறிந்த இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து சொல்வது நம்மீது கடமையாக உள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் " நீங்கள் மனிதக் குலத்திற்கு தேர்வு செய்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்குகிறீர்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்குகிறீர்கள்" (அல் குரான் 3:110) இன்னும் நபி(ஸல்) தன் இருதி ஹஜ்ஜில் கூறும்போது "என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்" எனக் கூறினார்கள்.

இக்கால கட்டத்தில் மக்களின் தீமைகள் அனாச்சாரங்கள் பன்மடங்கு பெறுகின்றது குறிப்பாக அல்லாஹ்வுடனும், அவனுடய தூதருடனும் போர் செய்யும் அளவுக்கு குற்றமான வட்டியை சர்வசாதரனமாக மக்கள் வாங்குவதும் , கொடுப்பதுமாக இருக்கின்றனர் மற்றும் விபச்சாரம், இனைவைப்பு, வரதட்சனை, சினிமா, நாடகம் என மக்களின் வழிகெட்ட பாதை விரிவடைந்து கொண்டே போகிறது இத்தகைய தீமையிலிருந்து நமதூர் மக்களை மீட்டு நேர்வழியின் பால் அழைப்பது நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்

எனவேதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தன்னுடைய பிரச்சாரத்தின் மூலம் இத்தகைய தீமைகளை தடுத்து மக்களை நேர்வழியின் பால் அழைக்கும் பனியை திறம்பட செய்கிறது அல்ஹம்துலில்லாஹ். முஸ்லிம்களிடம் மட்டுமில்லாமல் கிருஸ்த்துவர்கள், நாத்திகர்களிமும் விவாத்தித்து இஸ்லாம் மட்டும்தான் இறைவனின் மார்க்கம் என ஆனித்தரமாக நிருபித்து வருகிறது

மேலும் முஸ்லிம்களிடம் உள்ள அனாச்சாரங்களை ஒழித்திட நமதூர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பெண்கள் பயான், துன்டு பிரசுரங்கள், CDக்கள், தனிநபர் தாவா உள்ளிட்ட பலவித வழிகளின் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துறைத்து வருகின்றோம் இப்பனிகள் தொடர்ந்து நடைபெற பொருளாதார உதவியை செய்து தாங்களும் இப்பனியில் பங்கு கொண்டு மருமையில் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறோம்.

அல்லாஹ் கூருகின்றான் "எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்" (அல் குரான் 34:39) நபி(ஸல்) கூருகினார்கள் "அடியார்கள் ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் இரண்டு வானவர்கள் இரங்காமல் இருப்பதில்லை அவ்விருவரில் ஒருவர் இறைவன் (உன்வழியில்) செலவு செய்யும் ஒருவருக்கு பொருளை வழங்குவாயக என்று கூருவார் மற்றொருவர் இறைவா செலவு செய்யாமல் இருக்கும் நபருக்கு அழிவை கொடுப்பாயக என்று கூருவார்" புகாரி:1442, முஸ்லிம்:1010

சகோதரர்களே இறைவனின் வாக்குறுதி பொய்யாகாது இப்பணிக்காக தர்மம் செய்து பல மடங்கு (செல்வத்தை) பெருக்கிக்கொல்லுங்கள் இந்த பிரச்சாரத்தின் மூலம் ஒருவர் நேர்வழி அடைந்தாலும் அந்த நபர் மூலம் எத்தனை பேர் நேர்வழி பெற்றாலும் அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு உங்களுக்கே தெரியாமல் மருமையில் மலைப்போல் குவிந்து கிடக்கும் நன்மையை இன்ஷாஅல்லாஹ் பெற்றுடுங்கள்.

ஆனால் நமதூருக்கு அருகாமையில் இருக்கும் மாற்றுமத்தினர் சிலர் நம்மைவிட துல்லியமாக படித்து தெரிந்தவர்களாக உள்ளனர். அவர்களை நாங்கள் சந்தர்ப்பம் வரும்போது அடையாளம் காட்ட விரும்புகிறோம்.

நாம் இதற்க்கு முன்பு ஒரு அறிவிப்பு செய்தோம் தவ்ஹீத் பள்ளிக்கு ஒரு இமாம் ஏற்ப்பாடு செய்ய உள்ளோம் சம்பளம் மாதம் ரூ 8000 தேவைப்படுகிறது என்றோம். உடனே நமது கொள்கை சகோதரர்கள் சிலர் தேவையான பணத்தை முன்கூட்டியே தருவதாக வாக்களித்துள்ளனர்.அதுபோல இதை படிக்கும் ஒவ்வொருவரும் உங்களுடைய பொருளாதார உதவியயை தாராளமாக செய்யுங்கள். தங்களால் முடிந்த வகையில் பொருளாதர உதவியாகவோ அதை திறட்டி அனுப்புபவர்களாக இருந்தால் நல்லது. இமாம் கொண்டு வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு இமாம் குடும்பத்தோடு தங்குவதற்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் வாடகைக்கு வீடு நமதூரில் இருப்பதாக தகவல் கிடைத்தால் தெரியப்படுத்தவும்


தொடர்ப்புக்கு: ரஹமத்துல்லாஹ் 919443874058, சாகுல் 919659604545, பைசுல்லா 919976466464

(14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். பிப் 14 அன்று TNTJ மாநில தலைமை இந்திய முஸ்லிம்களின் ஜீவதார கோரிக்கையான மத்தியிலும், மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வாழ்வுரிமை போரட்டத்தை அறிவித்து அதனை நமதூர் ஜமாத்துக்கும் கிளையின் சார்பாக தெரிவித்தோம். மேலும் கொள்கை ரீதியாக நமக்குள் சில கருத்து வேருபாடுகள் இருந்தாலும் அனைவரும் கலந்து கொள்வதால் ஏற்படும் சமுதாய நன்மையையும் எடுத்து கூறப்பட்டது. வருவதாக ஜமாத்தினர் தெரிவித்தனர். அதன்படி திருவாரூக்கு கட்டிமேடு-ஆதிரெங்க முஸ்லிம் ஜமாத் மன்ற தலைவர் ஜனாப் முனாப்பும் பொருப்பாளர்களும் தனியாக காரில் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிளையின் சார்பாக 6 வேன்களில் நமதூர் மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹமதுலில்லாஹ்...