மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

ஹ‌ஜ் பெருநாள் 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனுடைய மாபெரும் கிருபையை கொண்டு ந‌ம‌தூரில் ஹ‌ஜ் பெருநாள் தொழுகை 27 /10 /2012 அன்று காலை ச‌ரியாக‌ 7:15 க்கு ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. TNTJ கிளை சார்பில் பண்ணைய தெருவில் மைதானத்தில் (திடலில்) நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது. மழைக்காலம் என்பதால்
மக்கள் ம‌ழையையும் பொருட்ப‌டுத்தாம‌ல் ப‌ன்ணைய‌த்தெரு திட‌லை நோக்கி த‌ம‌து வீடுக‌ளிலிருந்து 6:00 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்ட‌ன‌ர். அல்லாஹ்வுடைய‌ மாபெரும் கிருபையால் தொழுகைக்கு முன்பாக ம‌ழையும் நின்ற‌து. TNTJ ஜமாத் நிர்வாகிக‌ளும் மாற்று ஏற்ப்பாட்டுக்கும் யோசித்த‌ போது ம‌ழை நின்ற‌தை நினைத்து அல்லாஹ்வுக்கு ந‌ன்றி கூறிய‌வ‌றாக குறிப்பிட்ட‌ நேர‌த்தில் ஹ‌ஜ் பெருநாள் தொழுகையை ஆர‌ம்பித்த‌னர். இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு
திருவாரூர் மாவட்ட தாயி மரக்கடை பாட்சா அவ‌ர்க‌ள் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். இந்த ஹ‌ஜ் பெருநாள் உரை வருகைதந்தவர்களுக்கு புதிய உற்ச்சாகத்தை தந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு & ஆதிரங்கம் சகோத‌ர‌ர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் . (அல்ஹம்துலில்லாஹ்)

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்:

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை:

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)
நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி:

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்:

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்:

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.


தவ்ஹீத்வாதி என்று கூறலாமா ?




முஸ்லிம் என்ற வார்த்தை திருக்குர்ஆன் முழுவதும் குறிப்பிட்ட இயக்கத்தையோ மக்களையோ

குறிப்பதற்கான வார்த்தையாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது ஒரு பண்புப் பெயராகவே

பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.



சில அதிமேதாவிகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் இந்த வார்த்தையைத் தவிர வேறு எதையும்

...

சூட்டிக் கொள்ளக் கூடாது . இயக்கத்திற்கு பெயர்கள் வைக்கக் கூடாது என்று உளறி

வருகின்றனர். இவர்கள் இவ்வாறு உளறிய காரணத்தினால் இவர்கள் கூறியது போல் ஒற்றுமை

ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம்.



அடையாளப் பெயருக்கும் பண்புப் பெயருக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள

வேண்டும்.



பண்புப் பெயருடன் இன்னொரு பெயர் இருந்தால் பண்புப் பெயரை மறுப்பதாக ஆகாது.



ஒருவர் மிகவும் பொறுமைத்தன்மை உடையவராக இருக்கின்றார். இந்தத் தன்மையின் காரணமாக

அவரை நாம் பொறுமைசாலி என்று குறிப்பிடுவோம். இது பொறுமை என்ற பண்பின் அடிப்படையில்

உருவான பெயராகும்.



அதே நேரத்தில் ஒருவருக்கு வெள்ளையன் என்று பெயர் சூட்டுகின்றோம். அவர் மிகவும்

கருப்பாக இருந்தாலும் அவரை வெள்ளையன் என்றே அழைப்போம். இது அவரை அடையாளப்

படுத்துவதற்காக வைக்கப்பட்ட குறிப்பான பெயராகும்.



திருக்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் முஸ்லிம் என்ற வார்த்தை அடையாளப் பெயராகப்

பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு பண்புப் பெயராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.



முஸ்லிம் என்பது அடையாளப் பெயராக இருந்தால் சிலை வணங்கியைக் கூட முஸ்லிம் என்றே

குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.



ஆதம் (அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இறைவனுக்கு கட்டுப்பட்டு

வாழ்ந்த அனைவரையும் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்) என்றே அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான்.



நூஹ் நபியவர்களை முஸ்லிம் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى

اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72)10



நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங் களிடம் எந்தக்

கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு

கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்றும் கூறினார்.)







அல்குர்ஆன் 10 : 72



இபுறாஹிம் நபி முஸ்லிமாக இருந்தார் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا

مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (67)3



இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற

முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.



அல்குர்ஆன் (3:67)



இபுராஹிம் நபியவர்களும், இஸ்மாயில் நபியவர்களும் தம்மையும் தம்முடைய சந்ததிகளையும்

முஸ்லிம்களாக அதாவது இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மை கொண்டவர்களாக ஆக்க வேண்டும்

என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.



رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً

لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ

الرَّحِيمُ (128) [البقرة/128]



''எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், (முஸ்லிம்களாகவும்) எங்கள்

வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் (முஸ்லிம்

சமுதாயமாகவும்) ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித்

தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்''

(என்றனர்.)



அல்குர்ஆன் 2:128



யாகூப் நபி தன்னுடைய பிள்ளைகளுக்கு முஸ்லிம்களாக மரணிக்க வேண்டும் என்றே உபதேசம்

செய்துள்ளார்கள்.



وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ

اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (132) 2



''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான்.

முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது

பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்



அல்குர்ஆன் 2:132



أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا

تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آَبَائِكَ

إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ

مُسْلِمُونَ (133) 2



யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? ''எனக்குப்

பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது ''உங்கள்

இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய

ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்)

கூறினர்.



அல்குர்ஆன் 2 : 133



மூஸா நபியின் சமுதாயத்தையும் முஸ்லிம்கள் என்றே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது



وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آَمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ

تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ (84)10



''என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே

சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார்.



சூனியக்காரர்கள் தாங்கள் ஈமான் கொண்டவுடன் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம் என்றே

கூறினார்கள்.



وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آَمَنَّا بِآَيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (126)7



''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே

எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா!

எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!''

என்றனர்



அல்குர்ஆன் 7 : 126



அல்குர்ஆன் 10 : 84



பிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது தான் முஸ்லிம்களில் ஒருவனாகி விட்டேன் என்று

கூறினான்.



وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ

وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آَمَنْتُ

أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آَمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ

الْمُسْلِمِينَ (90)10



இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும்

அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன்

மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு

யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்.



அல்குர்ஆன் 10 : 90



ஈஸா (அலை) அவர்களின் உதவியாளர்களும் முஸ்லிம்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.



فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ

قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آَمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ

بِأَنَّا مُسْلِمُونَ (52) 3



அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது ''அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர்

யார்?'' என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், ''நாங்கள் அல்லாஹ்வின்

உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே

சாட்சியாக இருங்கள்'' என்றனர்.



அல்குர்ஆன் 3 : 52



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தையும் அல்லாஹ் முஸ்லிம்கள் என்றே

குறிப்பிட்டு்ள்ளான்.



يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا

تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)3



நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள்

முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!



அல்குர்ஆன் 3 : 102



قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

(162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163)6



''எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின்

இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்

பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக



அல்குர்ஆன் 6 : 162, 163



மேற்கண்ட வசனங்களிலிருந்து இருந்து அனைத்து நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம்களே

என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.



நபிகள் நாயகம் அவர்களுடைய சமுதாயத்திலும் முந்தைய நபிமார்களின் சமுதாயத்திலும்

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மை கொண்ட மக்களை முஸ்லிம்கள் என்றே

குறிப்பிட்டதாக அல்லாஹ் 22 : 78 வசனத்தில் கூறுகின்றான்.







உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச்

சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு

முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்



அல்குர்ஆன் 22 : 78



முஸ்லிம் என்ற வார்த்தையை தனக்குக் கட்டுப்படும் மக்களுக்கு அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான். இது பண்பின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்தான். இது ஒரு

அடையாளப் பெயராக இருக்குமென்றால் முஸ்லிம் என்ற வார்த்தையை விட ஒரு வார்த்தையைக்

கூட்டுவதோ குறைப்பதோ கூடாது.



இது ஒரு பண்புப் பெயராக இருப்பதின் காரணத்தினால் தான் நபியவர்கள் முஸ்லிம் என்ற

வார்த்தையுடன் இன்னும் சில வார்த்தைகளைச் சேர்த்து அல்லாஹ் வைத்த பெயர் என்று

கூறியுள்ளார்கள்.







2790 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا آمُرُكُمْ

بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ السَّمْعُ وَالطَّاعَةُ وَالْجِهَادُ

وَالْهِجْرَةُ وَالْجَمَاعَةُ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ قِيدَ شِبْرٍ

فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ وَمَنْ

ادَّعَى دَعْوَى الْجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ فَقَالَ رَجُلٌ

يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ قَالَ وَإِنْ صَلَّى وَصَامَ فَادْعُوا

بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمْ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ عِبَادَ

اللَّهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمدي



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு ஐந்து விஷயங்களை

ஏவுகின்றேன். அல்லாஹ் அவற்றைக் கொண்டு எனக்கு கட்டளையிட்டான். அவையாவன:

செவிதாழ்த்துதல், கட்டுப்படுதல், ஜிஹாத் செய்தல், ஹிஜ்ரத் செய்தல், அல்ஜமாஅத் எனும்

கூட்டமைப்பாக இருத்தல். ஏனெனில் யார் இஸ்லாமிய (அரசான) கூட்டமைப்பை ஒரு சாண் அளவு

பிரிந்து செல்கிறானோ அவன் தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் (ஒப்பந்தமான)

வளையத்தைக் கழற்றி விட்டான். அவன் மீண்டும் திரும்பி வந்தாலே தவிர. எவன்

அறியாமைக்கால அழைப்பை அழைக்கின்றானோ அவன் நரகத்தின் கொள்ளிக்கட்டையாவான் என்று

கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே அவன் தொழுதாலும் நோன்பு

நோற்றாலுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவன் தொழுதாலும் நோன்பு

நோற்றாலும்தான் என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடைய அழைப்பைக் கொண்டே நீங்கள் அழைத்துக்

கொள்ளுங்கள் அவன் உங்களுக்கு அல்முஸ்லிமீன், அல்முஃமினீன், இபாதல்லாஹ் என்று பெயர்

சூட்டியுள்ளான் என்று கூறினார்கள்.



அறிவிப்பவர் : அல்ஹாரிஸ் (ரலி)



நூல் : திர்மிதி (2790)



அஹ்மத் 21835 வது ஹதீஸில் இபாதல்லாஹ், அல்முஃமினீன், அல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ்

பெயர் சூட்டினான் என நபியவர்கள் கூறியதாக வந்துள்ளது.



அறியாமைக் காலத்தில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வார்த்தைகளைப்

பயன்படுத்தி அழைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதனை உடைத்தெறிந்தது.



அல்லாஹ்வின் அடியார்கள் மத்தியில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது. அனைவரும்

இபாதல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்) அல்முஸ்லிமீன் (கட்டுப்பட்டவர்கள்)

அல்முஃமினீன் (இறைநம்பிக்கையாளர்கள்) என்று தான் முஸ்லிம்கள் தங்களுக்குள்

குறிப்பிட வேண்டும் என நபியவர்கள் போதித்தார்கள்.



முஸ்லிம்களாக இருப்பவர்கள் பெயரினால் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் தங்களுக்குச் சில

பண்புகளின் அடிப்படையில் அடையாளப் பெயர்களைப் பயன்படுத்துவது மார்க்கத்திற்கு

எதிரானது அல்ல.



நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்தில்

நபிமார்கள் வழியில் நடந்தவர்களையும் முஸ்லிம்கள் என்றே அல்லாஹ் கூறியுள்ளதை முன்னர்

எடுத்துக் காட்டியுள்ளோம். யாரை முஸ்லிம் என்று அல்லாஹ் குறிப்பிட்டானோ அவர்களை

வேறு பெயர்களிலும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.







நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி

அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும்

மாட்டார்கள்.



திருக்குர்ஆன் : 2:62







நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும்

இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.



திருக்குர்ஆன் : 5:69



மேற்கண்ட இரண்டு வசனங்களில் யஹூதிகள் எனும் யூதர்கள், நஸாரா எனும் கிறித்தவர்கள்,

சாபியீன்கள் ஆகியோரில் அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால்

அவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.



இந்தத் தன்மையில் உள்ள அனைவரும் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை முன்னர்

நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும்

அவர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.



சாபியீன்கள் என்ற பெயர் அல்லாஹ் சூட்டிய பெயர் அல்ல. மக்களாகச் சூட்டிக் கொண்ட

பெயர் ஆகும். ஆனாலும் அவர்கள் அந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டதால் முஸ்லிம் என்ற

பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இவர்கள் சாபியீன்கள் என்று அல்லாஹ் வைக்காத

வேறு பெயர் வைத்துக் கொண்ட்தால் அவர்கள் குற்றவாளிகள் என்று கூறாமல் சொர்க்கவாசிகள்

என்று அல்லாஹ் கூறுகிறான்.



மேலும் அல்லாஹ் அனைத்து நபிமார்களுடைய சமுதாயத்திற்கும் முஸ்லிம்கள் என்று பெயர்

சூட்டியிருந்தாலும் அவர்களுக்குரிய அடையாளப் பெயர்களைக் கொண்டும் அல்லாஹ்

அழைத்துள்ளான்.



அஹ்லுல் கிதாப், அஸ்ஹாபுல் உஹ்தூத், யகூதிகள், நஸராக்கள், பனீஇஸ்ரவேலர்கள்

என்றெல்லாம் திருக்குர்ஆனில் முந்தைய சமுதாயத்திற்குரிய அடையாளப் பெயர்களை அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான். இந்தப் பெயர்களில் முந்தைய சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்களும்

அடக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.



அது போன்று காஃபிர்களையும் அவர்கள் வசித்த இடம், செய்த பாவம் ஆகியவற்றை

அடிப்படையாகக் கொண்டு தோப்புவாசிகள், சனிக்கிழமைவாசிகள் என்பது போன்ற அடையாளப்

பெயர்களைக் கொண்டு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் மதீனா ஸஹாபாக்கள் அன்சாரிகள் என்றும்

மக்கா ஸஹாபாக்கள் முஹாஜிர்கள் என்றும் நபியவர்கள் காலத்திலேயே

அழைக்கப்பட்டுள்ளார்கள்.



முஸ்லிம்கள் என்றுதான் அழைக்க வேண்டும் . அன்சாரிகள், முஹாஜிர்கள் என்ற குறிப்பிடக்

கூடாது என அல்லாஹ்வும் தடுக்கவில்லை. நபிகள் நாயகமும் தடைவிதிக்கவில்லை. முஹாஜிர்

என்று சொன்னதால் முஸ்லிம் என்ற பண்புப் பெயரை மறுத்த்தாக அவர்கள் ஆகவில்லை.



மாறாக அல்லாஹ்வே திருமறைக் குர்ஆனில் அன்சாரிகள் முஹாஜிர்கள் என்று பெயர்

வைத்துள்ளான்.



وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ

اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ

لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ

الْفَوْزُ الْعَظِيمُ (100)9



முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில்

அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும்

அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து

வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள்

என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.



அல்குர்ஆன் 9 : 100



قَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ

اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ

فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ (117) 9



இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில்

ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில்

அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்;

இரக்கமுடையோன்



அல்குர்ஆன் 9 : 117



அல்லாஹ்வே தங்களுக்கு அன்சாரிகள் என்று பெயர் சூட்டினான் என அனஸ் (ரலி) அவர்கள்

குறிப்பிட்டுள்ளார்கள்.



ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:



நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு)

அன்சார்-உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.

உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ்

உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா? என்று கேட்டேன். அவர்கள், அல்லாஹ் தான்

எங்களுக்கு (அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான்

என்று குறிப்பிட்டார்கள்



நூல் : புகாரி 3776



முஸ்லிம்களாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் அன்சாரிகள் என்றும் முஹாஜிர்கள் என்றும்

பெயர் சூட்டியதிலிருந்தே முஸ்லிம்கள் தங்களுக்குள் சில பெயர்களைச் சூட்டிக் கொள்வது

தவறில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.



அது போன்று ஸஹாபாக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அஸ்ஹாபுஸ் சுஃப்ஃபா “திண்ணை

ஸஹாபாக்கள்“ என்று அழைக்கப்பட்டுள்ளார்கள்.



குர்ஆனை நன்றாக ஓதக்கூடியவர்கள் குர்ராக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.



முஸ்லிம் என்று மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்று இருந்தால் இவ்வாறு

அழைப்பதற்கு நபியவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.







இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணைவைப்புக் காரியங்களில் மூழ்கி உள்ள

காரணத்தினால் மக்களுக்கு தவ்ஹீத் கொள்கையை எடுத்துரைக்க வேண்டும், ஓரிறைக் கொள்கை

உடைய மக்களை ஒன்றிணைத்து செயல்படுவதின் மூலம் மார்க்க ரீதியிலான சில பலன்களை அடைய

முடியும் என்ற அடிப்படையிலேயே தவ்ஹீத் வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத் என்ற வார்த்தை

பயன்படுத்தப்படுகிறது.









தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர்

இடுவது கூடாது என்று சிலர் சமுதாயத்தில் உளறி வருகின்றனர். அரபு மொழியைப் பற்றியும்

குர்ஆன் ஹதீஸைப் பற்றியும் ஞானம் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான வாதத்தை

வைத்து வருகின்றனர்.



குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும்

பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.



அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்)

என்றும் பல இடங்களில் கூறுகின்றான்.



وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ

سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ(31)9



ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர

வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன்

தூயவன்.



அல்குர்ஆன் (9 : 31)



இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல்

இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத்

என்ற வார்த்தைகள்.



தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால்

ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன்

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும் இஸ்லாம் என்ற

வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்

தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற

சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப்

பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.



7372 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا الْفَضْلُ

بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ

مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ

مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَمَّا بَعَثَ

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ

أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ

فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى

فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ

خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ

أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ

غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ

مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ رواه البخاري



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு

அனுப்பிய போது அவர்களிடம், "நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம்

செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக்

கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால்,

தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று

அவர்களிடம் தெரிவியுங்கள்.



புகாரி (7372)



19 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ

حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ عَنْ

أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ عَنْ

النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى

خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ

وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ

لَا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى

اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم



"இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. (இறைவன்

ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கை. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது.

4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள்

கூறினார்கள்''



அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)



நூல் : முஸ்லிம் (19)



கோபித்துக் கொண்டான் என்று ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் கோபம் என்பது அந்த

நுலில் இல்லை எனக் கூற முடியாது. கோபித்துக் கொண்டான் என்பதில் கோப்ம அடக்கமாக

உள்ளது. அது போல் தான் யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு

உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து

கொள்வார்கள்.



தவ்ஹீத் என்ற சொல் நேரடியாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.



2137 وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا

وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ

مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ فَأَهَلَّ بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ

لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ

لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ

بِهِ رواه مسلم



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக்

லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ,

உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான்

கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும்

ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன்

தல்பியாச் சொன்னார்கள்.



அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)



நூல் : முஸ்லிம் (2334)



3597 حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ

عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ

رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ مِنْ الْخَيْرِ شَيْئًا قَطُّ

إِلَّا التَّوْحِيدَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِأَهْلِهِ إِذَا أَنَا

مِتُّ فَخُذُونِي وَاحْرُقُونِي حَتَّى تَدَعُونِي حُمَمَةً ثُمَّ اطْحَنُونِي

ثُمَّ اذْرُونِي فِي الْبَحْرِ فِي يَوْمٍ رَاحٍ قَالَ فَفَعَلُوا بِهِ ذَلِكَ

قَالَ فَإِذَا هُوَ فِي قَبْضَةِ اللَّهِ قَالَ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ

مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ مَخَافَتُكَ قَالَ فَغَفَرَ اللَّهُ لَهُ

رواه أحمد



தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூட ஹதீஸ் நூல்களில் உள்ளது. வாதி என்பதற்கு அஹ்ல் என்ற

சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி அஹ்ல்

அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப்

பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.



حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى

الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم

الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون

كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من

غير وجه عن جابر



தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.

அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.

நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள்.

சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில்

புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்



அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)



நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665



தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர்

கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.



எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் தவ்ஹீத் வாதி என்பதும் நபி (ஸல்) அவர்கள்

பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.



பெயரினால் ஒற்றுமை ஏற்படும் என்பதும் தவறான வாதமாகும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த

அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் பகைமை ஏற்படத்தான் செய்யம்.



எத்தனை பெயர்களில் இருந்தாலும் அனைவரும் அல்லாஹ்வின் சட்டத்திற்குக் கட்டுப்பட

வேண்டும் என்ற கொள்கைக்கு வந்துவிட்டால் தான் ஒற்றுமை ஏற்பட்டுவிடும்.



அதைத்தான் நபியவர்கள் அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் மத்தியில் அவர்களின்

பெயர்களை ஒரே பெயராக ஆக்காமல் ஒற்றுமைப்படுத்திக் காட்டினார்கள்.



ஒரே பெயரில் இருந்தாலும் கொள்கைகள் மாறுபட்டிருந்தால் நிச்சயமாக அங்கு ஒற்றுமை

ஏற்படாது. இதனைப் பல்வேறு வரலாறுகளும், நடைமுறைகளும் நமக்கு பாடம் படித்துத்

தருகின்றன.



சில அதிமேதாவிகள் பெயரினால் ஒற்றுமை குலைகிறது என்று கூறி வருவது அவர்களின்

முதிர்ச்சியின்மையையே படம் பிடித்துக் காட்டுகிறத



Visit : www.kattimedtntjfacebook.com