மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

வழிகெடுக்க துடிக்கும் கட்டிமேடு இஸ்லாமிய நூலக குழுமத்தினர்


காரணத்தை அறிந்து கொள்ள இந்த செய்தியை முழுமையாக படியுங்கள். கட்டிமேடு நூலகத்தை சேர்ந்த சில சகோதரர்களின் சலபி கொள்கை சம்மந்தமாக அவர்களுடைய தவறுகளை நோட்டீஸாக கட்டிமேட்டில் TNTJ வினர் வெளியிட்டு எந்த அளவுக்கு அவர்கள் மார்கத்துக்கு முரனாக இருக்கிறார்கள் என்று தெள்ள தெளிவாக நோட்டீஸில் சுட்டிகாட்டி இருந்தோம். அதற்கு அவர்கள் இன்றுவரை கட்டிமேட்டு மக்களிடம் மறுப்பு வெளியிட்டு தங்கள் நிலையை எழுத்து பூர்வமாக பதில் அளிக்க முடியவில்லை. அதைப்போல 18/5/2013 அன்று பொதுக்கூட்டம் நடத்தபோகிறோம் என்று ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிப்பு செய்து சலபி கொள்கை சேர்ந்த அந்த குறிப்பிட்ட ஜிப்பா போட்டு கொண்டு கட்டிமேட்டில் அலையும் சகோதரர்களிடம் கால அவகாசம் நிறையாக உள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் அன்று நேரடியாக கேள்வி கேட்க வாருங்கள் என்றோம். அதற்கும் செவி சாய்கவில்லை. மேடையிலேயே மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் எனது உரைக்கு பிறகு கேள்வி கேட்க வாருங்கள் என்று அழைத்தார் அப்போதும் வரவில்லை. ஆனால் 2/11/2013 அன்று காலையில் திடுதிப்பு என்று அவசர கோலத்தில் கட்டிமேட்டை சேர்ந்த மதிப்புக்குறிய பெரியவர் சகோ: பீர் முஹம்மது மகன் அப்பாஸ் என்பவர் எங்களுடைய முக்கியமான பிரமுகர் கட்டிமேட்டுக்கு 1 மணிநேரத்தில் வருகிறார். நீங்கள் (TNTJ வினராகிய) உடனே வந்து கேள்வி கேளுங்கள் தெளிவு பெருங்கள் என்று கிளை தலைவர் சேக் அப்துல்லா அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அதற்கு அவர் சிறிய கால அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். திடீர் என்று அழைக்கிறீர்களே இன்று சொந்த வேலைகள் நிறைய உள்ளது. வேறு ஒரு நாள் வைத்து கொள்ளுங்கள் என்று TNTJ வினர் கூறினார்கள். அதற்கு வழிகெட்ட சலபி கொல்கையை சேர்ந்தவர்கள் அதெல்லாம் முடியாது வேறு ஒரு நாளில் வைப்பதாக இருந்தால் பாண்டிச்சேரியில் இருந்து அவர்களை வரவளைக்க ரூ 10,000 முதல் ரூ 15,௦௦௦ வரை செலவாகும் அதை நீங்கள் தருகிறீர்களா ? என்றார் அதற்கும் TNTJ வினர் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் மக்கள் தெளிவடைய வேண்டும் என்பதற்காக அந்த செலவை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம் வேறு ஒரு நாளில் கேள்வி கேட்கிறோம் என்று கூறினார்கள். இரண்டு பேருக்கும் வசதிபட்ட நாளில் ஏற்பாடு செய்யவேன்டியது தானே அந்த வழிகெட்ட சலபி கொல்கையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் தயாராக இல்லை. இதன் மூலம் தவ்ஹீத் ஜமாத்தினரை பார்த்து சிங்கத்தை கண்டு ஓடும் ஓநாய் போல ஓடுகிறார்கள். பல சொந்த வேலைகளுக்கு இடையில் அல்லாஹ்வுடைய தவ்ஹீத் என்னும் சத்திய கொல்கைக்காக தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு கிளை தலைவர் தலைமையில் செல்கிறார் அவர்களுடைய சபைக்கு சென்று தாங்கள் யார் என்று அறிமுகம் செய்து கொண்டு (TNTJ வினர் என்று) கேள்வி கேட்க வந்துள்ளோம் என்று கூரியவுடன் அந்த முக்கிய பிரமுகர் இப்போது Class நடைபெறுகிறது என்றார். அதற்கு TNTJ வினர் எங்களை இப்போது கேள்வி நேரம்தான் என்று அழைத்தார்கள் என்று கூறி கட்டிமேட்டில் வெளியிட்ட (நோட்டீசை காண்பித்து) இந்த "வழிகெட்ட சலபி கொள்கை" என்ற ஆதாரபூர்வமாக தூய இஸ்லாமிய அடிப்படையில் சுட்டி காட்டிய நோட்டீஸ்சுக்கு பதில் எழுதி கொடுங்கள் என்று கொடுத்தபோது அதற்கு அந்த முக்கிய பிரமுகர் உண்மையாளராக இருந்தால், கொல்கையில் உருதிமிக்கவராக இருந்தால் பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் மழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த கேள்விதான் தெரியுமே என்று கூறி, எழுதி எல்லாம் கொடுக்க முடியாது ஆடியோ வடிவில் தருகிறோம் என்றார். சலபி கொல்கைதான் உன்மையானதாக இருந்தால் நாம் நோட்டீசில் கூறிய குற்றசாட்டுகளுக்கு பதில் கூறி இருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி கூறவிரும்பவில்லை. உடனே TNTJ வினர் பராவில்லை.எப்படியாயினும் எங்களுக்கு பதில் கிடைத்தால் போதும் என்று சபையிலிருந்து விடைபெற்றனர். ஆனால் ஒருவாரத்திற்கு பிறகு கட்டிமேட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவர் ஆடியோவை கொடுத்தார். அந்த ஆடியோவை TNTJ வினர் கேட்ட போது அதில் நாம் வெளியிட்ட நோட்டீசில் உள்ள கேள்விளுக்கு ஒரு வார்த்தை கூட பதில் இல்லை. அவருடைய பேச்சு எப்படி உள்ளது என்றால் நாம் மத்ஹபுகளை பின்பற்ற கூடியவர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் அறிவு கெட்டவர்களாக எப்படி செயல்படுவார்களோ (ஆணி மடம் என்றால் நோனி மடம் என்பார்களே) அதுபோல நாம் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் PJ என்ற தனிநபரை தரை குறைவாகவும், கேவலமாகவும் பேசி அதன் மூலம் பப்ளிசிட்டி கிடைப்பதுதான் நோக்கமாக கொண்டுள்ளார். அவர் ஒரு காபிர் என்று பத்வா கொடுத்துள்ளோம் என்று கூறி உள்ளார். அந்த முக்கிய பிரமுகர். மேலும் சஹாபாக்களை TNTJ வினர் திட்டுவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் அபாண்டமாக கூறிவுள்ளார். தங்கள் சலபி கொல்கை மீது கூறிய குற்றசாட்டுகளுக்கு ஒரு வார்த்தை கூட விளக்கம் கொடுக்காமல் அதை விடுத்து வேறு ஒரு தனிநபரை சாடுகிறார். இதன் மூலம் இவர்கள் பொய்யர்கள்தான் என்று உருதியாகிறது. இவர்களின் முகத்திரையை இன்ஷாஅல்லாஹ் விரைவில் கிழிப்போம் இவர்களுடைய கொள்கை வழிகெட்ட கொள்கை என்று அல்லாஹ்வுயை உதவியால் கட்டிமேட்டில் நிரூபணமாகிறது. இவர்களுடைய சொல்லும், செயலும் தர்கவாதிகளுக்கு துணை போகிறவர்கலாகதான் அமைந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து இவர்களுடைய முகத்திரை இன்ஷாஅல்லாஹ் கிழிப்போம். அறியாமையில் இதில் இருக்கும் நம் ஒவ்வொறு சகோதரர்களை இன்ஷா அல்லாஹ் மீட்டெடுப்போம்.கட்டிமேடு இஸ்லாமிய நூலகத்தை ஆரம்பிகும்போதே தவ்ஹீதை பிரச்சாரம் செய்யப்போகிறோம் என்று அதில் உள்ள சகோதரர்கள் கூறி அதற்கு களமாகதான் அதை அமைத்தனர். ஆனால் இன்று அது நிர்வாக திரன்மையின்மை காரணத்தால் சீரழிகிறது. அது தவ்ஹீத்துக்கு எதிரான களமாக மாறியுள்ளது. .இன்ஷா அல்லாஹ் வழிகெட்ட சலபிகளை பற்றிய கேள்விக்கனைகள் தொடர்ந்து வரும் 

குறிப்பு :- பொதுக்கூட்டம் வீடியோ link :http://www.hominin.com/video/-1-368

வங்கி கணக்கு துவக்கம்


திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு -ஆதிரெங்கம் கிளை சார்பாக 25-10-2013 அன்று முதல் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்காக புதிதாக வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. 

பணம் அனுப்புபவர்கள் இந்த கணக்கை பயன்படுத்தவும். 

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு கிளை"

Tamilnadu Tawheeth jamath Branch Kattimedu
A/c No :127001000004448 
IFCS IOBA : 0001270
Indian Overseas Bank (IOB) - Kattimedu.

ஜும்ஆ தொழுகை :9/8/2013

கட்டிமேடு-ஆதிரங்கம் கிளை சார்பாக கடந்த 9-8-2013 அன்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் அன்வர்தீன் அவர்கள் உரையாற்றினார். இதில் மக்களுக்கு பள்ளியில் போதிய இடமின்றி பள்ளி நிறம்பி வெளியில் நின்று தொழும் அளவிற்கு மக்கள் வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

TNTJ பெயரில் மனை பத்திர பதிவு செய்யப்பட்டது

கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை சார்பாக கடந்த 26-6-2013 அன்று வேளாகண்ணியை சேர்ந்த சகோதரர் அய்யூப் அவர்கள் தனது 7.5 குழி காலியான மனையை மார்க்க பனிக்காக தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தள்ளார். அல்ஹம்துலில்லாஹ். (அவருக்காக துஆ செய்யவும்.) மேலும் இந்த இடத்தை முறையாக அலந்து, பள்ளியை விரிவுபடுத்தவுள்ளதால் உங்கள் பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறோம் 

நமதூர் தவ்ஹீத் பள்ளியில் ரமலான் ஏற்பாடு

இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் கட்டிமேடு & ஆதிரெங்கம் TNTJ கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க அட்டவனையை மூன்றாக(3) பிரித்துள்ளோம். அதற்கான செலவினை பகிர்ந்து கொள்ளளுங்கள். கீழ்கண்டவற்றை தனி நபராகவோ , குடும்பமாகவோ , கூட்டாகவோ செய்யலாம் 

1) நோன்பு கஞ்சி காச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஒரு முறை ரூ 1,500)

2) பள்ளியிலேயே நோன்பு திறக்கவும் இப்தார் விருந்து (ஒரு முறை ரூ 1,000)

3) சஹர் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. (ஒரு முறை ரூ 4,000)

மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி ரமலான் கடைசி 10 இரவும் மட்டும் சஹர் உணவு

தாங்கள் கொடுக்கவிருக்கும் நாளையும், பொருளையும்
எங்களுக்கு தெரியப்படுத்தவும். அட்டவணையிட்டு முறையாக செயல் பட ஏதுவாக இருக்கும்.

கஞ்சியை சென்ற ஆண்டு முதல் நாமே காச்சுவதாக நிர்வாகம் முடிவு செய்து தொடங்கபட்டுவிட்டது. மேலே உள்ள தொகை உத்தேசமாக நிர்ணயம் செய்துள்ளோம் . (அரசிடம் இலவச அரிசியை இந்த ஆண்டே பெற ஏற்பாடு நடக்கிறது. துவா செய்யவும்.)

அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்.

இந்த செலவினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

பாஷித் :919894677930, பைசுல்லா :919976466464, சேக் :919698158143

திருத்துறைப்பூண்டியில் தொழிலதிபர் வீட்டை அபகரிக்க முயற்சி: தே.மு.தி.க. வினர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி, பிப். 6-


சென்னை 21-05-2013 (செவ்வாய்க்கிழமை)



... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை அப்துல் ஜலீல். தொழிலதிபர். இவருக்கு சொந்தமான வீடு திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை தே.மு.தி.க. அலுவலமாக பயன்படுத்த வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து அங்கு தே.மு.தி.க. அலுவலகம் செயல்பட்டு வந்தது.



தற்போது அந்த வீடு தனக்கு தேவைப்படுவதாகவும் அதனை காலி செய்யும் படியும் தே.மு.தி.க. வினரிடம் தெரிவித்தார். ஆனால் அலுவலகத்தை காலி செய்ய மறுத்து வீட்டை அபகரித்து தன்னை தாக்க முயற்சி செய்ததாக தே.மு.தி.க.வினர் மீது அப்துல் ஜலீல் திருத்துறைப் பூண்டி போலீசில் புகார் செய்தார்.



இதன் பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப் -இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



திருத்துறைப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் ஜமால், நகர செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சுங்லாந்தி சரவணன்,முன்னாள் நகர செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான என். எஸ். செந்தில் குமார், மற்றும் நிர்வாகிகள் ஆட்டூர் கண்ணன், சக்தி, பாரதி ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டம் வீடியோ வெளிவந்துவிட்டது 18/5/2013

அல்ஹம்துலில்லாஹ் 

கடந்த 18/5/2013 சனிக்கிழமை நமதூர் TNTJ கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்டிமேடு வரலாற்றில் முதன் முறையாக நாம் தாம் இணையதளத்தில் நிகழ்ச்சியை  நேரடியாக ஒளிபரப்பு செய்தோம். அதை  உலகம் முழுக்க இருக்க கூடிய நம் சகோதரர்கள் கண்டுகளித்தனர்.   நிகழ்ச்சியை சில சகோதரர்கள் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டனர். அதனால்  முழுமையான வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். 

அதற்கான முகவரி : http://www.tntjthiruvarur.com/2013/05/blog-post_4171.html

இவண் 
TNTJ
கட்டிமேடு - ஆதிரெங்கம்

மார்க்க விளக்க பொதுக் கூட்டம்  18/5/13

கட்டிமேடு- ஆதிரங்கம் கிளை தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மாவட்ட கிளை  நிர்வாகிகள் தலைமையில்  > 18/5/2013 சனி கிழமை மாலை 6 மணிக்கு கட்டிமேட்டில்  மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்  அப்பாஸ் அலி அவர்கள் "இஸ்லாத்தில் மூல ஆதாரம் எது ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த பொதுகூட்டதிற்கு ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 300 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

கட்டிமேட்டி​ல் மார்க்க விளக்க பொதுக்கூட்ட​ம் (18-5-2013​)

இன்று

இன்ஷா அல்லாஹ்  18-5-2013
 
திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு- ஆதிரங்கம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ்அலி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வெளிநாட்டு சகோதரர்கள் இனையதளத்தில் பார்க்க நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்கான தளத்திற்கு செல்ல
  இங்கே சொடுக்கவும் (Live) : www.tntjthiruvarur.com



கோடைகால பயிற்சி முகாம்

கட்டிமேடு & ஆதிரெங்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளையின் சார்பில் மே 11-05-2013 முதல் மே 20-05-2013 வரை மாணவ,மாணவிகளுக்காக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றவுள்ளது. உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இவண் 

நிர்வாகி
தொடர்புக்கு : 8526413803, 9698158143