மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

திருத்துறைப்பூண்டியில் தொழிலதிபர் வீட்டை அபகரிக்க முயற்சி: தே.மு.தி.க. வினர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி, பிப். 6-


சென்னை 21-05-2013 (செவ்வாய்க்கிழமை)



... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை அப்துல் ஜலீல். தொழிலதிபர். இவருக்கு சொந்தமான வீடு திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை தே.மு.தி.க. அலுவலமாக பயன்படுத்த வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து அங்கு தே.மு.தி.க. அலுவலகம் செயல்பட்டு வந்தது.



தற்போது அந்த வீடு தனக்கு தேவைப்படுவதாகவும் அதனை காலி செய்யும் படியும் தே.மு.தி.க. வினரிடம் தெரிவித்தார். ஆனால் அலுவலகத்தை காலி செய்ய மறுத்து வீட்டை அபகரித்து தன்னை தாக்க முயற்சி செய்ததாக தே.மு.தி.க.வினர் மீது அப்துல் ஜலீல் திருத்துறைப் பூண்டி போலீசில் புகார் செய்தார்.



இதன் பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப் -இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



திருத்துறைப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் ஜமால், நகர செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சுங்லாந்தி சரவணன்,முன்னாள் நகர செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான என். எஸ். செந்தில் குமார், மற்றும் நிர்வாகிகள் ஆட்டூர் கண்ணன், சக்தி, பாரதி ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment