மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

Tntj kattimedu-ல் கூட்டு #குர்பானி - #2018*


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

# *கூட்டு #குர்பானி - #2018*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *கட்டிமேடு & ஆதிரெங்கம்* கிளையின் சார்பாக வருடா வருடம் கூட்டு குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்!.

அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் இந்த 2018-ம் வருடமும் நாம் இந்த கூட்டு குர்பானி திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.

7 பங்குதாரர்கள் கொண்ட ஒரு மாட்டின் பங்கு தலா நபர் ஒருவருக்கு *₹2,400* (இரண்டாயிரத்து நான்னூறு) என நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாம் வசூல் செய்யும் பணத்திற்க்கு வருடா வருடம் முறையாக வரவு-செலவு கணக்கை பராமரித்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் தாங்களும் ஒரு பங்குதாரர்களாக இணைந்து நன்மைகளை அதிகமதிகம் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

                      لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

 *திருக்குர்ஆன்  22:37*

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

 *முஸ்லிம்: 2325*

இப்படிக்கு:
#தமிழ்நாடு #தவ்ஹீத் #ஜமாஅத்
# கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை
#திருவாரூர் மாவட்டம்

Website : http://kattimedtntj.blogspot.com
Facebook : Kattimedu tntj (மற்றும்) Tntj Kattimedu

கூட்டு குர்பானி கொடுக்க தகுதியுடையவர்கள்  கிளையில் உங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:
Rahamatulla
+91 9443874058
Fasith
+91 98 42 885219

ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு


இன்ஷா அல்லாஹ்
வருகிற (29-07-2018) ஞாயிறுக் கிழமை

 *ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு*

 *பேச்சாளர்கள் :*
CV. இம்ரான்
மாநில பேச்சாளர்

 *நேரம்* : காலை 10:30 AM

 *இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை

அனைவரும் தவறாமல் பயானில் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளை,
திருவாரூர் தெற்கு மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.


கட்டிமேடு தவ்ஹீத் மர்க்கஸில் இரவு தொழுகை இரவு 1:45 மணிக்கு நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடருந்து

கட்டிமேடு மர்க்கஸில் ஆண்கள் பெண்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பித்ரா விநியோகிக்கப்பட்டு வருகிறது


*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருவாருர் தெற்கு கட்டிமேடு ஆதிரெங்கம் கிளை சார்பாக  சுமார் 160 ஏழை குடும்பங்களுக்கு (சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு-2018)பிஃத்ரா வழங்கப்பட்டது* .

 பித்ரா எனும் ஏழைகளுக்கான நோன்பு பெருநாள் தர்மம் விநியோகிக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு ஆதிரெங்கம் கிளையின் சார்பாக பித்ரா பணத்தை கூட்டாக வசூலித்து பொருட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மார்க்க கேள்வி பதில் TNTJ


TNTJ கட்டிமேடு கிளையில் இரவு தொழுகையின் போது மார்க்க கேள்வி பதில் கேட்டு சரியாக பதில் சொன்ன ஆண்கள் பெண்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது.

பெருநாள் தொழகை அறிவிப்பு


*அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)*

*அறிவிப்பு:-* 

               *இன்ஷா  அல்லாஹ்,
நபிவழி அடிப்படையில் பெருநாள் தொழகை*
*சரியாக காலை*
*7:15 மணிக்கு நடைப்பெறும்.*

*இடம்:- மர்க்கஸ் அருகில் உள்ள திடலில் நடைப்பெறும் என்பதை*
*தெரிவித்துக்கொள்கிறோம்*

*இப்படிக்கு.*
*TNTJ நிர்வாகம்.       
 கட்டிமேடு கிளை*

ஈதுல் ஃபித்ர் பெருநாள் திடல்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்று(16/6/18) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு கிளை சார்பாக ஈதுல் ஃபித்ர்  பெருநாள் திடல் தொழுகை நடந்து முடிந்தது...
அல்ஹம்துலில்லாஹ்

கோடைக்கால் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்கள்.


KATTIMEDU TNTJ கோடைக்கால் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்கள்.

இன்று இரவு தொழுகை சிறப்பாக நிறைவேறியது.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
KATTIMEDU கிளையில்

இன்று இரவு தொழுகை சிறப்பாக நிறைவேறியது.

அல்ஹம்துல்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
KATTIMEDU

TNTJ. கட்டிமேடு கிளை சார்பாக நோன்பாளிக்காக இப்தார் ஏற்பாடு


TNTJ. கட்டிமேடு கிளை சார்பாக நோன்பாளிக்காக இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

 அல்ஹம்த்துலில்லாஹ்

*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*


*ரமலான் நோன்புக் கஞ்சி முறை அறிவிப்பு*

இன்ஷா அல்லாஹ்… ரமலான் மாதத்தில் TNTJ-திரூவாருர் மாவட்டம் -கட்டிமேடு கிளை சார்பாக நோன்பு திறக்க கஞ்சி மற்றும் இஃப்தார் வருடந்தோறும் செய்வது போன்று இந்த வருடமும் செய்யப்படுகிறது. நோன்புக் கஞ்சி முறை ஒன்றுக்கு ரூபாய், 2,500/-மற்றும் இஃப்தார் முறை ஒன்றுக்கு ரூபாய்.1200/- கடைசி இரவு 10-க்கு முறைக்கு.(.......) /- என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



ரமலானில் இரட்டிப்பு நன்மையினை பெற்று தர உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேலும், 📞தொடர்புக்கு:-
.+91 94 43 874058, +91 86758 57282

தெருமுனைக்கூட்டம் (TNTJ KMD - ADM) (14-04-2018)


.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ்
வருகின்ற 14/04/2018 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை சார்பாக  தெருமுனை கூட்டம் நடைப்பெற உள்ளது.

ஏகத்துவத்தின் எழுச்சி மற்றும் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் இடங்களில் உரையாற்றுகின்றனர்.

இடங்கள்:
1.தர்கா தெரு
2. மண்ணடித் தெரு
3. பள்ளிவாசல் தெரு

அனைவரும் தவராமல் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ)
கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளை.

*வீடூ வீடாக பெண்கள் தர்பியாக்கு அழைப்பு பணி(TNTJ)


*வீடூ வீடாக தர்பியா அழைப்பு பணி*

அல்ஹம்துலில்லாஹ்...

*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தர்பியாவில் 125-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறுவன் -30 நபர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்*


*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா  நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.


*திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக இன்று 11-02-2018 ஞாயிறு கிழமை காலை  10:30 மணி அளவில்*

*பெண்களுக்கான சிறப்பு ஒரு நாள் தர்பியா  பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது*

*இதில் ஆலிமா அவர்கள் தொழுகை & ஜனாஸா சட்டங்கள் திட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்*

*இதில்  125-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறுவன் -30 நபர்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்*


அல்ஹம்துலில்லாஹ்...

*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு


*இன்ஷா அல்லா...*

திருவாரூர் மாவட்டம்,
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ)  கிளையின் சார்பாக  (11-02-2018) வருகிற ஞாயி்று கிழமை காலை

 *பெண்களுக்கான ஒரு நாள் தர்பியா பயிற்சி வகுப்பு* நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட சார்பாக பெண்கள் ஆலிமா மூலம் பயிற்சி அளிக்கபட உள்ளது.

*தலைப்பு :  ஜனாஸா மற்றும் தொழுகை சட்ட திட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்* .

 *இடம்* : தவ்ஹுத் மர்கஸ்
 *நேரம்* : காலை 10:00
 *குறிப்பு* : மதிய உணவு எற்பாடு செய்யப்பட உள்ளது.(இதற்காக உங்களால் முடிந்த பொருளாதார உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் )

இதில் அதிக பெண்கள்  கலந்து கொண்டு பயன் பெற தூவா செய்யுங்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ) கிளை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு


கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!

*கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை*

இன்ஷா அல்லாஹ்...
நாளை 31-01-2018  புதன்கிழமை அன்று  சூப்பர் ப்ளு  எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம்  தொடங்கும்

மாலை 6.21மணி முதல் 
இரவு 7.37 மணி வரை
முழு சந்திர கிரகணம் இருக்கும். 

இரவு 7.37மணி முதல் கிரகணம் விலக ஆரம்பித்து இரவு 8.41மணிக்கு முழுமையாக விலகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம்  கண்ணுக்கு தென்பட்டால் நபி (ஸல்) அவர்கள் சிறப்புத் தொழுகை நடத்த அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் எங்கு கிரகணம் ஏற்பட்டது தெளிவாக தெரிகிறதோ அங்கு கிரகணத்தை காண்பவர்கள் கிரகண தொழுகை தொழுவது நபிவழியாகும்.

இந்த அடிப்படையில் கிரகணம் தென்படும்பட்சத்தில்  நமது மர்கஸ்களில் சிறப்பு தொழுகையை நடத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம் எஸ். சையது இப்ராஹீம்

*கிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்)*

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.
(புகாரி 1041, முஸ்லிம் 1670)

கிரகணத்தைப் பார்த்தால்தான் தொழ வேண்டும் என்று நபிகளார் தெளிவாக கூறியுள்ளதால் கிரகணம் தெளிவாக தெரியாத பகுதியில் தொழுகை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகணம் தெளிவாக தெரியும் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படி தொழுகையை கடைபிடிக்க வேண்டும்.

நபிமொழிகளில் கிரகணம் தொடர்பாக வந்துள்ள வழிகாட்டுதல்களை காண்போம்.

கிரகணமும் நபிகளார் காட்டிய வழிமுறைகளும்!

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்)  காட்டித் தந்துள்ளார்கள்:

கிரகணத் தொழுகை தொழுகும் முறை:

1.கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

2.பள்ளியில் தொழ வேண்டும்.

3.இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

4.இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

5.ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்.

6.நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.

7.கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும்.

8.மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

'நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரி 1051, முஸ்லிம் 1515.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1065, முஸ்லிம் 1502.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள்.

பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள்.

பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.

பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.

 பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை'என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515.

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1044,
முஸ்லிம் 1499.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள்.

(பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:
அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரி 1059, முஸ்லிம் 1518.

பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக இன்று 28-01-2018 ஞாயிற்று கிழமை மாலை  4 மணி அளவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது.
இதில் ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில்  70-க்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Alhamdhullilah

மதிய உணவிற்க்கு பிறகு இரண்டாம் அமர்வு துவங்கியது.


அஸ்ஸலாமு அலைக்கும்.

21/01/2018 அன்று கட்டிமேட்டில் ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்.

மதிய உணவிற்க்கு பிறகு இரண்டாம் அமர்வு துவங்கியது.

சிறப்புரை: A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி(மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்) உரையாற்றுக்கிறார்.

முதல் உரை ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

21/01/2018 அன்று கட்டிமேட்டில் ஒரு நாள் மாவட்ட தர்பியா ஆரம்பம்

முதல் உரை : சகோ Ms செய்யது இப்ராஹிம் (மாநிலப் பொதுச்செயலாளர் )அவர்கள்

தலைப்பு: வஹி என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறார்.

*மீண்டும் நினைவூட்டுகிறோம்*


*மீண்டும் நினைவூட்டுகிறோம்*

இன்ஷா அல்லாஹ்
வருகிற (21-01-2018) ஞாயிறுக் கிழமை

 *ஒரு நாள் மாவட்ட தர்பியா பயிற்சி வகுப்பு*

 *பேச்சாளர்கள் :*  *எம்.எஸ்.சையது இப்ராஹீம்*
பொதுச் செயலாளர்

 *அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி*
மாநில பேச்சாளர்

 *நேரம்* : காலை 10:30 AM

 *இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை

அனைவரும் தவறாமல் பயானில் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*இப்படிக்கு* :-
கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளை,
திருவாரூர் தெற்கு மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

TNTJ(KMD-ADM) நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்


தற்போது ஜும்மா தொழுகையின் போது. ஏகத்துவ மர்கஸ் (TNTJ-Kattimedu branch) Opening Date (19-1-18).

TNTJ (KMD-ADM) கிளையில் ஏகத்துவ மர்கஸ் அமைய உதவி செய்த அனைத்து நல்வுள்ளம் படைத்த. சகோதரர் க்கு

 நிர்வாகம்  சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Alhamthulila

தற்போது வரை நிறைவு பெற்ற ஏகத்துவ மர்கஸ்(TNTJ) வீடியோ(14-1-18)




இன்ஷா அல்லாஹ்

வருகிற(19-01-2018) வெள்ளி கிழமை (ஃபஜ்ர் தொழுகையில் இருந்து)முதல் ஏகத்துவ  மர்கஸ் ஆரம்பம் மாக உள்ளது.


 *புதிய மர்கஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) திறப்பு*


திருவாரூர் தெற்கு மாவட்டம்
கட்டிமேடு & ஆதிரங்கம் கிளை (TNTJ)



 ஜுமுஆ அன்று

சிறப்பு பேச்சளார் உரை நடைபெறும்.


அனைவரும் தவறாமல் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


இப்படிக்கு :-

கட்டிமேடு & ஆதிரங்கம் கிளை,
திருவாரூர் தெற்கு மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

*புதிய மர்கஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) திறப்பு* TNTJ


இன்ஷா அல்லாஹ்
வருகிற19-01-2018 வெள்ளி கிழமை (ஃபஜ்ர் தொழுகையில் இருந்து)முதல் ஏகத்துவ  மர்கஸ் ஆரம்பம் மாக உள்ளது.

 *புதிய மர்கஸ் (மஸ்ஜிதுல் அக்ஸா) திறப்பு*

திருவாரூர் தெற்கு மாவட்டம்
கட்டிமேடு &ஆதிரங்கம் கிளை (TNTJ)


 ஜுமுஆ அன்று
சிறப்பு பேச்சளார் உரை நடைபெறும்

அனைவரும் தவறாமல் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு :-

கட்டிமேடு &ஆதிரங்கம் கிளை
திருவாரூர் தெற்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

*ஒரு நாள் மாவட்ட தர்பியா பயிற்சி வகுப்பு* TNTJ


இன்ஷா அல்லாஹ்
வருகிற (21-01-2018) ஞாயிறுக் கிழமை

 *ஒரு நாள் மாவட்ட தர்பியா பயிற்சி வகுப்பு*

 *பேச்சாளர்கள் :*  *எம்.எஸ்.சையது இப்ராஹீம்*
பொதுச் செயலாளர்

 *அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி*
மாநில பேச்சாளர்

 *நேரம்* : காலை 10:30 AM

 *இடம்* : தவ்ஹீத் மர்கஸ்(மஸ்ஜிதுல் அக்ஸா)
கட்டிமேடு & ஆதிரங்கம் (TNTJ)கிளை

அனைவரும் தவறாமல் பயானில் கலந்து பயன்பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு :-

கட்டிமேடு & ஆதிரங்கம்(TNTJ) கிளை,
திருவாரூர் தெற்கு மாவட்டம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்