மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பித்ரா விநியோக கணக்கு விரைவில்...


அல்லாஹ்வின் திருபெயரால்
நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.
நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும் எனவேதான் நாம்
நமதூரிலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” விநியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. எனவே இவ்வருடமும் 150 குடும்பங்களுக்கு விநியேகம் செய்யப்பட்டது. நபி வழிப்படி ரூ 80 (நாம் பயன்படுத்தும் அரிசி 2 .2 /1 கிலோ வின் விலை ) வசூலித்து மக்களுக்கு வழங்கினோம் இதன் முழுமையான விபரம் இன்னும் சில தினங்களில் வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ்
'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி ;59

No comments:

Post a Comment