மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

பேய்பிசாசு ஓர் பித்தலாட்டமே*


*பேய்பிசாசு ஓர் பித்தலாட்டமே*



மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 39:42

பேய், பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆவிகள் அனைத்தும் இறைவனது கைவசத்தில் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல்கள் : புகாரி 6320, 7393 முஸ்லிம் 5257

மனிதன் தூங்கும் போது தற்காலிகமாகவும், மரணத்தின் போது நிரந்தரமாகவும் மனித உயிர்களை அல்லாஹ் தன் கைவசத்தில் எடுத்துக் கொள்கிறான் என்று இந்த நபிமொழியும் தெளிவாக்க் கூறுகின்றது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.

உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் கூறியதற்கு எதிராக பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், இறைவனையும், இறைத்தூதரையும் நம்பியவனாக முடியுமா?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.  திருக்குர்ஆன் 23:99,100

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது.

இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்குத் திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸக் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸக் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள்.

இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு (பர்சக்) திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. திருக்குர்ஆன் 55:19,20

விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

இதில் பயன்படுத்தியுள்ள பர்சக் என்ற வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

மனிதன் இறந்த பின் அவனுக்கும், இவ்வுலகுக்கும் இடையே பர்ஸக் எனும் திரை போடப்படுவதாகக் கூறியதன் மூலம் இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இறைவன் அறிவிக்கின்றான்.

திருக்குர்ஆனின் இவ்வசனத்தை நம்பும் ஒரு முஸ்லிம், இறைவன் ஏற்படுத்திய அந்தத் தடையை ஆவிகள் உடைத்துக் கொண்டு, மண்ணுலகம் வந்து நடமாடும் என்று எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

பர்ஸக் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் இதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்?

பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). நூற்கள் : புகாரி 1338, 1374, 1379, 6515, முஸ்லிம் 5505

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையைப் பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மனிதர்களுடைய ஆவிகளின் நிலை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்குவதைக் காணுங்கள்!

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும், நீலநிறக் கண்களும் உடைய இரண்டு வானவர்கள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர். மற்றொருவர் நகீர். இந்த மனிதர் பற்றி (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அதற்கு அவர், முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார். அவனது அடியாருமாவார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம்” என்று அவ்வானவர்கள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாஃபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எலும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும், கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

உலகில் நல்லவனாக வாழ்ந்த மனிதன், வானவர்களின் விசாரணைக்கு சரியான பதிலைக் கூறுகிறான். அதன் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனைக் கண்ட அம்மனிதன் தனது இல்லத்துக்குச் சென்று இதனைத் தெரிவித்துவிட்டு வருவதற்கு அனுமதி கோருகிறான். அந்தக் கட்டத்தில் “புது மாப்பிள்ளை போல் உறங்குமாறு இறைவனால் கூறப்படுகின்றது. தற்காலிகமாக சிறிது நேரம் இவ்வுலகுக்கு வந்து விட்டு மீண்டும் திரும்பி வருவதற்குக் கூட நல்ல உயிர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கியாமத் நாள் வரையிலும், இறைவன் எழுப்பும் காலம் வரையிலும் ஆழ்ந்த உறக்க நிலையிலேயே நல்ல உயிர்கள் இருந்து வருகின்றன என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த உறக்கத்தினிடையே காலையிலும், மாலையிலும் அவனுக்கு சொர்க்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை முந்தைய ஹதீஸ் கூறுகின்றது. இது நல்லடியார்களது உயிர்களின் நிலைமை.

மரணித்த மனிதன் கெட்டவனாக வாழ்ந்து மறைந்திருந்தால் அவன் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை பூமியால் நெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கியாமத் நாள் வரை உறக்க நிலையில் இருந்து வரும் நல்ல ஆவிகளும், அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் பூமியால் நெருக்கப்படும் கெட்ட ஆவிகளும் இவ்வுலகுக்கு வர முடியாது என்பதற்கும் இந்த ஹதீஸ் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

இதன் பின்னரும் பேய்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புபவர்கள் முன்னர் நாம் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களை நம்ப மறுக்கிறார்கள். மேலே கூறிய நபிமொழிகளையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படும் முன்கர், நகீர் எனும் மலக்குகளை நம்ப மறுக்கின்றார்கள் என்பதே பொருளாகும்.

“ஆமன்து பில்லாஹி, வமலாயிகதிஹி வகுதுபிஹி வருஸுலிஹி……..

என்று கூறி அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்புவதாக உறுதியளிக்கும் முஸ்லிம் பேய் இருப்பதாக நம்பும் போது இந்த நான்கையும் ஒரே நேரத்தில் மறுத்தவனாக ஆகிவிடுகின்றான்.

இங்கே எடுத்துக் காட்டப்பட்ட விஷயங்களே இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரப் போதுமானவை என்றாலும் எஞ்சியுள்ள இன்னும் சில ஐயங்களையும் நீக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மற்றும் சில ஹதீஸ்களையும் காண்போம்.

மனிதன் மரணித்த பின்னர் திரும்பவும் இவ்வுலகுக்கு அவனது உயிர் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்குமானால் மனிதர்களிலேயே மிகவும் உயர்ந்த நிலையைப் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் தூதரான அவர்களுக்குக் கூட இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அல்லாஹ்வின் தூதரே தெரிவித்து விடுகின்றார்கள்.

“பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி). நூல்கள் : நஸாயீ, தாரிமி

இந்த ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தையும் பொறுக்கியெடுத்து பயன்படுத்தியது போல் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக அவர்களது சமுதாயத்தினர் ஸலாம் கூறினால் அந்த ஸலாமைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதற்காகவென்றே இறைவன் வானவர்களை நியமனம் செய்திருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இருந்த இடத்திலிருந்தே நாம் கூறும் ஸலாமை கேட்கக் கூட இயலாது. மாறாக வானவர்கள் தான் அதைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட இறந்தவருக்கும், இந்த உலகுக்கும் நேரடியாக யாதொரு தொடர்பும் கிடையாது என்பதையும் இது தெளிவாகக் கூறுகின்றது. நேரடித் தொடர்பு இருக்கின்றது என்றால் இதற்கென்றே இறைவன் சில வானவர்களை நியமிக்க வேண்டியதில்லை.

“உங்களின் இல்லங்களைக் அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! எனது அடக்கத்தலத்தை விழாத் தலமாக ஆக்காதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்து ஸலவாத் கூறினாலும் என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல் : நஸாயீ

முந்தைய ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் ஸலாம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் கூறும் ஸலவாத் பற்றிக் குறிப்பிடுகின்றது.

ஸலவாத்தை நான் செவியுறுகிறேன் என்றோ, ஸலவாத் கூறும் இடத்திற்கு வருகை புரிகிறேன் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்றே கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட மரணத்திற்குப் பின் இவ்வுலகத்துடன் – இவ்வுலகத்து மாந்தருடன் – நேரடியாக யாதொரு உறவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித ஆத்மாவின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் ஆத்மாக்கள் எப்படி இவ்வுலகுக்கு வருகை முடியும்? பேய்களாக எப்படி உலா வர முடியும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மனிதர்களில் நபிமார்கள் மிகவும் உயர்வானவர்கள் என்றால் அதற்கு அடுத்த நிலையை உடையவர்கள் ஷஹீத்கள் எனும் உயிர்த்தியாகிகளாவர்.

சத்தியத்தை நிலைநாட்டும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அடியார்களின் கடன் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவர்களின் உயர்வான நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த உயிர்த் தியாகிகளுடைய ஆவிகளின் நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

உயிர் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சொர்க்கத்தில் விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி தந்து நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். எங்கள் இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில் எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டபின் எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும். மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு விரும்புவர். அப்போது “திரும்பச் செல்வது தவிர வேறு தேவை இவர்களுக்கு இல்லை என்பதால் அப்படியே அவர்கள் விடப்படுவார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி). நூல் : முஸ்லிம் 3834

இறைவனுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் மிகவும் உயர்வான ஒரு காரியத்திற்காக உலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்கின்றார்கள். உயர்வான பதவியைப் பெற்றவர்கள் உயர்வான பணிக்காக உலகுக்கு வருவதற்கு அனுமதி கேட்டும் இறைவன் மறுத்து விடுகின்றான்.

ஸுனன் சயீத் பின் மன்சூர் நூலில் “இறந்தவர்கள் மண்ணுலகுக்கு வர முடியாது என்று விதியாக்கி விட்டேன்” என இறைவன் அப்போது கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு தெளிவான ஆதாரங்களைக் கண்ட பிறகு, இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியும் என்று நம்பலாமா? அப்படி நம்புவது இஸ்லாமாக இருக்க முடியுமா?

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நபிமார்களின் ஆத்மாக்களும், உயிர்த் தியாகிகளின் ஆத்மாக்களும் திரும்ப வர இயலாது என்பது நிரூபனமான பின் மற்ற ஆத்மாக்கள் பேய்களாக உலகுக்கு வர முடியும் என்பதை நம்ப முடியுமா?

தங்களின் உள்ளங்களில் ஊறிப்போன பேய்கள் பற்றிய நம்பிக்கையை இஸ்லாம் மறுக்கின்றது என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பேய்களை விரட்டியடித்து விடும் அளவுக்கு உறுதியான ஈமான் உள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை நாம் எடுத்து வைத்த சான்றுகளே போதுமானதாகும். இதற்கு மேல் இவர்களுக்கு விளக்கம் தேவையில்லை.

திருக்குர்ஆனே கூறினாலும், திருத்தூதரே சொன்னாலும் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை விட்டுவிடத் தயங்குபவர்களும் நம்மில் உள்ளனர். அல்லாஹ்வை விடவும், அவனது தூதரை விடவும் இத்தகையவர்களுக்கு இன்னும் ஆயிரம் சான்றுகளைச் சமர்ப்பித்தாலும் இவர்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபடப் போவதில்லை. இவர்களை நாம் விட்டு விட வேண்டியது தான்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாரம்பர்ய நம்பிக்கையையும் விடமுடியாமல், அதே நேரத்தில் நாம் எடுத்துக் காட்டிய பேய்களுக்கு எதிரான சான்றுகளை மறுக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்.

No comments:

Post a Comment