மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

ஸஃபர் மாதமும் முஸ்லீம்களின் நிலையும்

*நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?*

நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, *“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!”* என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“ஆம்; உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்”* என்று சொன்னார்கள்.

நான், *“(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?”* என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, *“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை”* என்று சொன்னார்கள்.

நூல் : *புகாரி (5660)*

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி ஸல் அவர்கள் *நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தமது சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் -ரலி- அவர்கள்), *“நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?”* என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், *“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்.)”* என்று பதிலளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிக்ழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் – அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, *“அன்சாரிகள் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்து கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. ஆகவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்”* என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3799)

நபிகளார் பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாகவே பரவலாகப் பேசப்படுகிறது. அதில் அவர்கள் இறக்கும் காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, *யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்”* என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : *புகாரி (1330)*

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : *புகாரி (198)*

இதுபோன்ற நபிமொழிகள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ,

நூல் : *தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம் : 234*

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்,

நூல் : தபகாத்துல் குப்ரா, பாகம் : 2, பக்கம் : 272

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை. மேலும் *இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர் என்பவர் பலவீனமானவராவார். இதைப் போன்று முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதி என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.*

*எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது.* நபிகளார் இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோய்யுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

*ஏகத்துவம்*

I love my wife

மனைவியை காதலியுங்கள்..

திருமணம் செய்துக்கொள்வதன் மூலம்
நீங்கள் வெறும் மனைவியை மட்டும்
அடைவதில்லை.

அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின்
இறுதி நாள் வரை அவள் தான் உங்கள்
இல்லறத்தின் பங்காளி, வாழ்வின் நீண்ட
பாதையில் வழித்துணை மற்றும் உற்ற
தோழி எல்லாம்.

அன்று முதல் அவள் தான் உங்களுடைய
ஒவ்வொரு நொடியையும்,
தினத்தையும், வருடங்களையும்,
சுகங்களையும், துக்கங்களையும்,
கனவுகளையும், கவலைகளையும்
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்

.நீங்கள் நோயுறும் போது, அவள்
உங்களை மிகுந்த அக்கறையுடன்
கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு
ஏதேனும் உதவி தேவைப்படும் போது
ஓடோடி வருபவளும் அவள் தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள்
பாதுகாப்பாள். உங்களுக்கு
ஆலோசனைகள் தேவைப்படும் போது
அவள் தான் உங்கள் மதி மந்திரி.
உங்கள் மனைவி தான் உங்களுடன்
எப்போதும் உடன் இருப்பவள். காலையில்
நீங்கள் கண் விழிக்கும் போது உங்கள்
கண்கள் பார்க்கும் முதல் காட்சி
அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.
அன்றைய தினம் முழுவதும் அவள்
உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில்
அவள் இருக்க முடியாமல் போகும்
போது அவளது நினைவுகள் உங்களை
சூழ்ந்திருக்கும். காரணம் அவளது
ஆன்மா, மனம், இதயம் மூன்றும்
இறைவனிடம் உங்களுக்காக
பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த
தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு
போகும் முன்பு நீங்கள் கடைசியாக
பார்ப்பது அவளது கண்களாகத்தான்
இருக்கும்.

உறங்கி விட்டப் பிறகும்
உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள்.
சுருக்கமாகச் சொன்னால் அவள் தான்
உங்கள் முழு உலகம், நீங்கள் தான் அவளது
முழு உலகம்.

கணவன் மனைவி உறவைப்பற்றி
குர்ஆனை விட சிறப்பாக யார் தான்
இயம்பிட முடியும்..?

இந்த உறவின்
தன்மையைப் பற்றி, அது இருக்க
வேண்டிய நெருக்கத்தைப் பற்றி
பேரறிவாளன் அல்லாஹ்வின்
வர்ணனைகளை பாருங்களேன்..
“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப்
போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு
ஆடைகளைப் போன்றவர்கள்”.(சூரா அல்-
பகரா.2:187).

எவ்வளவு சத்தியமான உவமை, ஆம்
உண்மையில் கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் ஆடைகளைப்
போன்றவர்கள். காரணம் ஆடைகள்
மனிதர்களுக்கு மானத்துக்கும்,
உடலுக்கும், பாதுகாப்பை,
மரியாதையை, அழகை, கண்ணியத்தை
வழங்குகின்றன. கடும் பனி
பிரதேசத்தில் பயணிக்கும்
பிரயாணிக்கு அவனது ஆடை எந்த
அளவுக்கு சுகத்தையும்,
பாதுகாப்பையும் தரும் என்று
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப்
பாதையில் நமக்கு சுகத்தை,
பாதுகாப்பை, கண்ணியத்தை
வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின்
மற்றெல்லா உறவுகளையும் விட மிக
ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம்.
திருமணத்திற்குப் பிறகு திடீரென்று
இணைந்த இருவரது உள்ளங்களிலும்
பெருக்கெடுக்கும் காதல், பிரியம்,
நெருக்கம், தாம்பத்யம், கருணை,
கனிவு, பரிவு, விட்டுக்கொடுத்தல்
முதலானவற்றிற்கு நிகரில்லை
அதற்கான காரணம் என்ன என்றும் நாம்
அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது
உள்ளங்களிலும் சுரந்து பெருகி
பெருவெள்ளமாய் அவர்களது வாழ்வை
வளமாக்க அவர்களது படைப்பாளன்
கருணைமிக்க அல்லாஹ் தான் தனது
அளப்பறிய அன்பாலும், நிகரற்ற
அருட்கொடைகளாலும், தனது
பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும்
காரணகர்த்தாவாக இருக்கின்றான். இந்த
உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில்
உணர்த்துகிறது.
அல்லாஹ் உங்களுக்கு துணைகளை
ஏற்படுத்தினான் (உங்கள் வாழ்க்கை
துணைகளை உங்களிலிருந்தே
உண்டாக்கினான்.)
(சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது
அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில்
தேடுவோருக்கு இந்த உணர்வுகள்
அவனது அத்தாட்சிகளில் உள்ளவை தான்
என்று உணர்த்தி அவனது வல்லமையை
மனிதர்கள் உணர்வதற்காக கீழ்கண்ட
வசனத்தில் சொல்கின்றான்:
மேலும் அவனது அத்தாட்சிகளில்
ஒன்று, அதாவது அவன் தான்
உங்களுக்கு துணைகளை
உங்களிலிருந்தே ஏற்படுத்தினான்,
நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து
கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள்
உள்ளங்களில் அன்பையும்
கருணையையும் பெருக செய்தான்.
நிச்சயமாக, அறிவுடையோருக்கு
இதில் தெளிவான அத்தாட்சி
இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின்
மனநிலையைப் பற்றி நன்கு தெரியும்.
அது நீண்ட காலம் ஒரே நிலையில்
இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள்
மாறும், உணர்வுகள் வேறு வடிவம்
பெறும், ஏன்.! காலம் ஓட ஓட காதல் கூடக்
கசக்கத் துவங்கும். முறையான கவனம்
செலுத்தப்படவில்லை என்றால் திருமண
பந்தம் தொய்வடையக் கூடும். நமது
முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த
நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும
ென்று எண்ணிவிடக்கூடாது. நாம்
அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த
இல்லறக்கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக
நிலைத்திருக்க வேண்டுமென்றால்
கணவன் மனைவி இருவரது கூட்டு
பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண
பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர
வேண்டுமென்றால் செடியை ஊன்றி
விட்டால் மட்டும் போதாது, அந்த மரம்
வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு,
நீரிட்டு, பரிமாரித்து, பாதுகாக்கப்பட்ட
ால் தான் முடியும்.

பெருமானார் நபி
(ஸல்..) அவர்கள் தமது சீரிய
பணிகளுக்கிடையேயும் தமது இல்லற
வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம்
ஒதுக்கிய சம்பவங்களை நினைவு
கூர்ந்து பாருங்கள்.
தங்களது மனைவி ஆயிஷாவை பாலை
வெளியில் அழைத்துச் சென்று
தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள்.
அதில் அன்னை ஆயிஷா வென்றார்.
ஆனால் சில காலத்திற்குப் பிறகு
அன்னையாருக்கு எடைகூடிய
காரணத்தால் அவர்களை நபியவர்கள்
வென்றார்கள். மேலும் தங்களது
மனைவியை எத்தியோப்பிய இளம்
வீரர்களின் வீர விளையாட்டுக்களை
காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

உங்களது மனைவியைப் பற்றி நீங்கள்
கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி
வெளிக்காட்டுவது, உறவை மேலும்
மேலும் பலப்படுத்த உதவும்.
நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும்
அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத்
தவறுவதில்லை என்ற உண்மையை
எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி
பெருமானார் (ஸல்..) அவர்கள்
சொன்னார்கள்:அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
நற்கூலி உண்டு, உங்கள் மனைவியின்
வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடும்
ஒரு கவளம் உணவு உட்பட.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய
சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக்
குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது,
வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது
போன்ற சிறு சிறு
விஷயங்களானாலும் சரியே.
அல்லாஹ்வின் தூதர் தங்களது மனைவி
ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால்
முட்டியை மடித்து அமர்ந்து உதவி
இருக்கிறார்கள் அல்லவா…?
அடிக்கடி இருவரும் சேர்ந்து
அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட
முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க
வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக
இரவில் விழித்தெழும் தம்பதியர்களை
நபி (ஸல்..) அவர்கள் வாழ்த்தியிருக்க
ிறார்கள்.

மேலும் முதலில் எழும்
தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை
விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை
முகத்தில் தெளிக்கத் தூண்டி
இருக்கின்றார்கள். எப்போதும்
சொல்லாலும் செயலாலும் உங்கள்
மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக்
கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக்
கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன்
அவர்களிடம் எப்போதும் பேசுங்கள்,
குடும்ப விஷயங்களில் அவர்களது
ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள்,
பிற விஷயங்களிலும் அவர்களது
அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து
கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து
அளவளாவ நிறைய நேரம் எடுத்துக்
கொள்ளுங்கள். இந்த விஷயத்தில்
அல்லாஹ்வின் தூதர் சொன்ன
பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது
மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று
பெயர் எடுப்பவர் தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி;
இருப்பதும், தங்களது மரணம் வரை
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு
செலுத்தி வாழ்வதும் இயல்பு தான்
என்றாலும், அது போதாது.
உங்கள் மனைவியிடம் அன்புடன்
நடந்துக்கொண்டால் மட்டும் போதாது,
அவர்கள் விரும்புவதை எல்லாம்
நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது
குடும்பத்தினர் மற்றும் அவர்களது
அன்புக்குப் பாத்திரமான
ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப்
பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின்
குடும்பத்தினரோ, அவர்களுக்கு
விருப்பமானவர்களோ உங்கள்
இல்லத்திற்கு வந்தால் அவர்களை
வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க
வேண்டும். இதற்கும் மேலாக ஒரு
விஷயம் இருக்கிறது. உங்களது மரணம்
வரை அவர்களை விரும்பினால் மட்டும்
போதாது, அவர்களை நீங்கள்
விரும்புவது உண்மையென்றால்
மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது
மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள
வேண்டும்.

நாம் தான் மரணத்திற்குப்
பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை
நம்பிக்கை வைத்துள்ளோமே. சூரா
அல்-ஜுக்ருஃப் 43:70 ல்
அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர்
தங்களது வாழ்க்கைத்
துணைவியருடனும், தங்களது
பிள்ளைகளுடனும் சொர்க்கம்
புகுவார்கள்.

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்..)
எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார
்கள் என்று பாருங்கள்: 25 வருட காலம்
தங்களது வாழ்க்கைத் துணையாக
இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின்
மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம்
ஆகியும் அன்னையாரின்
குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல்
அன்பு செலுத்தி வந்தார்கள். தங்களது
வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும்
அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக
்கு ஒரு பங்கை அனுப்ப தவறியதில்லை.
அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல்
நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும்
நிச்சயம் மனிதாபிமானம் நீடுடி வாழ
அகிலத்தோருக்கு பற்பல படிப்பினைகள்
உண்டு.

*🍃அறிவியல் குறித்த முன்னறிவிப்பு-

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *💁🏻‍♂ வருமுன் உரைத்த*
                               ⤵
                             *இஸ்லாம்*

            *✍🏻...தொடர் [ 06 ]*

*🍃அறிவியல் குறித்த முன்னறிவிப்பு-(05)*🍃


*🍃முளைகளாக மலைகள்🍃*

*🏮🍂பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.*

_*وَالْجِبَالَ أَرْسَاهَا*_

_*மலைகளை முளைகளாக நாட்டினான்.*_

*📖திருக்குர்ஆன் 79:31📖*

_*🍃பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா❓*_

*📖திருக்குர்ஆன் 78:6,7📖*

_*وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا*_

_*அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.*_

*📖திருக்குர்ஆன் 77:27📖*

_*وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ*_

_*🍃பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.*_

*📖திருக்குர்ஆன் 15:19📖*

_*وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ وَعَلَامَاتٍ ۚ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ*_

_*🍃பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.*_

*📖திருக்குர்ஆன் 16:15,16📖*

_*وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ*_

_*பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.*_

*📖திருக்குர்ஆன் 21:31📖*

_*أَمَّن جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ*_

_*🍃(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா❓ அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா❓ அல்லாஹ்வுடன் வேறு கடவுளா❓ இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.*_

*📖திருக்குர்ஆன் 27:61📖*

_*خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ*_

_*நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான்.*_

*📖திருக்குர்ஆன் 31:10📖*

_*وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ*_

_*🍃அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.*_

*📖திருக்குர்ஆன் 41:10📖*

*☄ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.*

*☄இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.*

*☄வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.*

*☄இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.*

*🏮🍂இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.*

*ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.*

_*🏮🍂இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.*_

*🏮🍂பூமி முதல் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.*

*🏮🍂முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41:10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻