மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள்🌏 தொடர் 4....


கியாமத் நாளின் அடையாளங்கள்🌏 தொடர் 4....        யாராலும் அறிய முடியாது

'அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்'' என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது'' என்பது தான்.

'அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.'இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். 'இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(திருக்குர்ஆன் 7:187)

'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக் கேட்கின்றனர்.'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே'' எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 67:25, 26)

நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்) தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 72:25)

'அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்?'' என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலையோ, அல்லது ஒரு காலையோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

(திருக்குர்ஆன் 79:42-46)

சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ,அவர்கள் அறியாத நிலையில் திடீரென அந்த நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

(திருக்குர்ஆன் 12:107)

அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூ கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!

(திருக்குர்ஆன் 20:15,16)

(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 33:63)

'அது எப்போது நிகழும்'' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த மனிதரும் அறிந்திருக்கவில்லை; அது இறைவன் மாத்திரமே அறிந்த ஒரு விஷயமாகும் என்று இவ்வசனங்கள் விளக்குகின்றன. ...   தொடரும் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment