மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

TNTJ பெயரில் மனை பத்திர பதிவு செய்யப்பட்டது

கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை சார்பாக கடந்த 26-6-2013 அன்று வேளாகண்ணியை சேர்ந்த சகோதரர் அய்யூப் அவர்கள் தனது 7.5 குழி காலியான மனையை மார்க்க பனிக்காக தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தள்ளார். அல்ஹம்துலில்லாஹ். (அவருக்காக துஆ செய்யவும்.) மேலும் இந்த இடத்தை முறையாக அலந்து, பள்ளியை விரிவுபடுத்தவுள்ளதால் உங்கள் பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறோம் 

நமதூர் தவ்ஹீத் பள்ளியில் ரமலான் ஏற்பாடு

இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் கட்டிமேடு & ஆதிரெங்கம் TNTJ கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க அட்டவனையை மூன்றாக(3) பிரித்துள்ளோம். அதற்கான செலவினை பகிர்ந்து கொள்ளளுங்கள். கீழ்கண்டவற்றை தனி நபராகவோ , குடும்பமாகவோ , கூட்டாகவோ செய்யலாம் 

1) நோன்பு கஞ்சி காச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஒரு முறை ரூ 1,500)

2) பள்ளியிலேயே நோன்பு திறக்கவும் இப்தார் விருந்து (ஒரு முறை ரூ 1,000)

3) சஹர் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. (ஒரு முறை ரூ 4,000)

மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி ரமலான் கடைசி 10 இரவும் மட்டும் சஹர் உணவு

தாங்கள் கொடுக்கவிருக்கும் நாளையும், பொருளையும்
எங்களுக்கு தெரியப்படுத்தவும். அட்டவணையிட்டு முறையாக செயல் பட ஏதுவாக இருக்கும்.

கஞ்சியை சென்ற ஆண்டு முதல் நாமே காச்சுவதாக நிர்வாகம் முடிவு செய்து தொடங்கபட்டுவிட்டது. மேலே உள்ள தொகை உத்தேசமாக நிர்ணயம் செய்துள்ளோம் . (அரசிடம் இலவச அரிசியை இந்த ஆண்டே பெற ஏற்பாடு நடக்கிறது. துவா செய்யவும்.)

அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்.

இந்த செலவினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

பாஷித் :919894677930, பைசுல்லா :919976466464, சேக் :919698158143

திருத்துறைப்பூண்டியில் தொழிலதிபர் வீட்டை அபகரிக்க முயற்சி: தே.மு.தி.க. வினர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி, பிப். 6-


சென்னை 21-05-2013 (செவ்வாய்க்கிழமை)



... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை அப்துல் ஜலீல். தொழிலதிபர். இவருக்கு சொந்தமான வீடு திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை தே.மு.தி.க. அலுவலமாக பயன்படுத்த வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து அங்கு தே.மு.தி.க. அலுவலகம் செயல்பட்டு வந்தது.



தற்போது அந்த வீடு தனக்கு தேவைப்படுவதாகவும் அதனை காலி செய்யும் படியும் தே.மு.தி.க. வினரிடம் தெரிவித்தார். ஆனால் அலுவலகத்தை காலி செய்ய மறுத்து வீட்டை அபகரித்து தன்னை தாக்க முயற்சி செய்ததாக தே.மு.தி.க.வினர் மீது அப்துல் ஜலீல் திருத்துறைப் பூண்டி போலீசில் புகார் செய்தார்.



இதன் பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப் -இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



திருத்துறைப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் ஜமால், நகர செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சுங்லாந்தி சரவணன்,முன்னாள் நகர செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான என். எஸ். செந்தில் குமார், மற்றும் நிர்வாகிகள் ஆட்டூர் கண்ணன், சக்தி, பாரதி ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.